/indian-express-tamil/media/media_files/2025/11/04/omsakthi-sekar-notice-2-2025-11-04-18-53-04.jpg)
நெல்லித்தோப்பு தொகுதி இந்திரா காந்தி சதுக்கம் அருகே தொடங்கிய விழிப்புணர்வு நிகழ்வு தொகுதி முழுவதும் நடைபெற்றது.
புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி இன்று தொடங்கி உள்ள நிலையில், வாக்காளர்கள் விழிப்புடன் இருந்து விடுபட்ட பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவான, ஓ.பி.எஸ் அணியினர் செவ்வாய்க்கிழமை வீடு தோறும் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழக மற்றும் புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி இன்று தொடங்கி டிசம்பர் 4-ம் தேதி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, புதுச்சேரியில் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி தொடங்கியது. இதனை ஒட்டி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் விடுபட்டவர்களை வாக்காளர் பட்டியல் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓம்சக்தி சேகர் தலைமையில் வீடுகள் தோறும் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நெல்லித்தோப்பு தொகுதி இந்திரா காந்தி சதுக்கம் அருகே தொடங்கிய விழிப்புணர்வு நிகழ்வு தொகுதி முழுவதும் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ ஓம் சக்தி சேகர், “வாக்காளர் பட்டியல் திருத்த பணி என்பது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு விடுபட்ட வாக்காளர்களையும் புதிய வாக்காளர்களையும் இணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர் அவசர கதியில் தொடங்கப்பட்டதாக காங்கிரஸ் தி.மு.க கூறுவது ஏற்புடையதல்ல வாக்காளர் பட்டியல் திருத்த பணியை நாங்கள் அமோகமாக வரவேற்கிறோம்” என்று தெரிவித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us