புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியை உடைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்கிறார் என ஓ. பன்னீர்செல்வம் அணியின் புதுச்சேரி செயலாளர் ஓம்சக்தி சேகர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ் அணி செயலாளர் ஓம்சக்தி சேகர்,
அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியதால்தான் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக முடிந்தது. அ.தி.மு.க-வில் ஒரு சில பேரை வைத்துக்கொண்டு சூழ்ச்சிகளை செய்து ஓ.பி.எஸ்ஸை வெளியேற்றிவிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காணுகிறார். அ.தி.மு.க-வில் அனைவரும் ஓ.பி.எஸ் தலைமையிலான ஒற்றை தலைமையே விரும்புகிறார்கள்.
2023 -ல் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க-விற்கு ஒற்றை தலைமை உருவாகும். அதேபோன்று புதுச்சேரியிலும் ஒற்ற தலைமை உருவாகி அ.தி.மு.க ஆட்சி அமைக்கும் என்றும்
தெரிவித்தார்.
தமிழக முன்னாள் அமைச்சர்கள் சண்முகம் மற்றும் ஜெயக்குமாரை வைத்து தமிழகத்தில் பாஜகவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி விமர்சித்து வருகிறார். அதே போல்.
புதுச்சேரியில் அ.தி.மு.க துணை செயலாளர் வையாபுரி மணிகண்டனை வைத்து தேசிய ஜனநாயக கூட்டணியை உடைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்கிறார். மாநில செயலாளர் அன்பழகன் மற்றும் துணைச் செயலாளர் மணிகண்டனின் செயல்பாடு தேசிய கூட்டணிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. அ.தி.மு.க-வுக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் இருவரது செயல்பாட்டை மக்கள் மத்தியில் சொல்லப்படும் என்றும் அவர் கூறினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"