கேரளாவைச் சேர்ந்த மலையாளிகள் உள்ளிட்டவர்களிடம் இருந்து சட்டவிரோதமாக உடல் உறுப்புகள் எடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும் கொச்சி காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு, 2 பேரைக் கைது செய்தபின், விசாரணைக்காக ஞாயிற்றுக்கிழமை தமிழகம் வந்தது.
சட்டவிரோதமாக உடல் உறுப்புகள் எடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ரகசிய தகவலைப் பெற்ற, கொச்சி காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு, உடல் உறுப்பு கடத்தல் முகவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க விசாரணைக்காக தமிழகம் வந்துள்ளது.
கேரளா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் உள்ளவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து உடல் உறுப்புகளை தானம் பெற்று ஏமாற்றிய சபித் நாசரை கைது செய்த கொச்சி போலீசார் சர்வதேச உடல் உறுப்பு கடத்தல் கும்பல் குறித்து விசாரணை நடத்தினர். சபித்தின் நெட்வொர்க்கில் உள்ளவர்களை அடையாளம் காண அவரது வங்கிக் கணக்கில் இருந்து நடந்த பணப் பரிவர்த்தனைகளை கொச்சி போலீஸ் சிறப்பு விசாரணைக் குழு ஆய்வு செய்ய உள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள, சபித் நாசர் ஈரானில் பணிபுரிந்தபோது உறுப்பு தானம் செய்பவர்களாக சுமார் 20 பேரை ஈரானுக்கு கடத்தியதை ஒப்புக்கொண்டார். இது நேரடியாக செய்யப்படவில்லை என்றும், ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர் மூலம் செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார் என்று போலீசார் கூறியதாக ஆன்மனோரமா.காம் செய்தி வெளியிட்டுள்ளது.
சபித் நாசர், போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், இதில் பாதிக்கப்பட்டவர்களில் கேரளாவின் வடக்கு பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தவிர மற்றவர்கள் அனைவரும் ஹைதராபாத் மற்றும் பெங்களூருவை சேர்ந்தவர்கள் என்று உறுதிப்படுத்தினார். உடலுறுப்பு கடத்தல் மாஃபியாவால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலக்காட்டைப் பற்றி வேறு எந்த தகவலும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கில், வெளிநாடுகளில் சிறுநீரகத்தை தானமாக வழங்கினால் சட்டப்படி இழப்பீடு வழங்கப்படும் என நம்பி அவர்களை கடத்தல் மூலம் ஏமாற்றியதாக தமக்கு கிடைத்த தகவலின் மூலம் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக உடல் உறுப்புகள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சபித் நாசர் மீது அவர் மீது ஐ.பி.சி பிரிவு 370 (ஒரு நபரைக் கடத்தல்) மற்றும் மனித உறுப்புகள் மாற்றுச் சட்டம், 1994 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வாக்கில், கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து அவர் மே 18-ம் தேதி கொச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து நெடும்பாச்சேரி காவல்துறையால் சபித் நாசர் அழைத்துச் செல்லப்பட்டார். மத்திய அமைப்புகள் அவரது கைது குறித்து மே 19-ம் தேதி பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே, வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட சஜித் ஷியாமைக் காவலில் எடுக்க அனுமதி கோரி போலீஸார் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். சபித் நாசரின் நெருங்கிய கூட்டாளி சஜித் ஷியாம் என்று சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“