Advertisment

ராகுல் காந்தி வருகைக்கு அனுமதி மறுப்பு; உஸ்மானியா பல்கலை.க்கு வலுக்கும் எதிர்ப்பு

உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் அரசியல் சாராத ராகுல் காந்தி நிகழ்ச்சிக்கு நிர்வாகம் அனுமதி மறுப்பு; தெலுங்கானா மாநில அரசை குற்றம்சாட்டும் காங்கிரஸ்

author-image
WebDesk
New Update
ராகுல் காந்தி வருகைக்கு அனுமதி மறுப்பு; உஸ்மானியா பல்கலை.க்கு வலுக்கும் எதிர்ப்பு

Sreenivas Janyala

Advertisment

Osmania University ‘refuses to permit’ Rahul Gandhi visit, campus simmers: இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான உஸ்மானியா பல்கலைக்கழகம், பல தசாப்தங்களாக மாணவர் அரசியலின் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆனால் "அரசியல் அல்லாத" நிகழ்வுக்காக மே 7 அன்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல்கலைக்கழக வளாகத்திற்கு வருகை தருவதற்கு ஒப்புதல் அளிக்க உஸ்மானியா பல்கலைக்கழகம் (OU) மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பல்கலைக்கழகம் அதன் முடிவை நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றாலும், சனிக்கிழமையன்று உஸ்மானியா பல்கலைக்கழக நிர்வாகக் குழுவின் அறிக்கை ஒரு அரசியல் சூறாவளியைத் தூண்டியது. இதனையடுத்து, ராகுல் காந்தியின் நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகம் ஒப்புதல் அளிக்க மறுத்ததற்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) தலைமையிலான மாநில அரசாங்கம் தான் காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. ராகுல் காந்தியின் வருகையை அனுமதிக்க பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி சில மாணவர்கள் அதே நாளில் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

ஏப்ரல் 23 அன்று நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி விண்ணப்பித்ததாகவும், ராகுல் காந்தியின் இந்த வருகை "அரசியல் சாராதது" என்றும் ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் தலைவர்கள் கூறினர். ஆனால் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், 2017 முதல் பல்கலைக்கழக நிர்வாகக் குழு வளாகத்தில் அரசியல் கூட்டங்கள் உட்பட கல்வி சாரா செயல்பாடுகளைத் தவிர்க்கும் தீர்மானத்தை கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் ஏற்றுக்கொண்டதாக சுட்டிக்காட்டினார்.

மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் அரசியல் மற்றும் பொதுக் கூட்டங்களை அனுமதிக்கக் கூடாது என்று மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, ஜூன் 2017 இல் இதுபோன்ற முதல் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும் அந்த அதிகாரி கூறினார். அரசியல் நடவடிக்கைகள் காரணமாக தொடர்ந்து இடையூறுகள் ஏற்படுவதாக சில மாணவர்களின் மனுவின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்பட்டது.

"உஸ்மானியா பல்கலைக்கழகம், உயர் கல்வியை வழங்குவதற்காக நிறுவப்பட்டது என்றும், அரசியல் கூட்டங்கள் போன்ற கல்வி சாரா செயல்பாடுகள் வளாகத்தில் அனுமதிக்கப்படாது என்றும் ஒரு சுற்றறிக்கையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கான தீர்மானமும் பல்கலைக்கழக நிர்வாகக் குழுவால் நிறைவேற்றப்பட்டது,” என்று அந்த பல்கலைக்கழக அதிகாரி கூறினார். ஆனால் ராகுல் காந்தி கலந்துகொள்ள திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த அந்த அதிகாரி மறுத்துவிட்டார். அதேநேரம், ஒரு அரசியல் தலைவரின் பல்கலைக்கழக வருகை என்பது அரசியல் சாராத நிகழ்ச்சியாக இருக்க முடியாது என்று மற்ற பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல்கலைக்கழகத்தின் அறிக்கையின் முடிவு வளாகத்தில் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. சனிக்கிழமையன்று பல இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உஸ்மானியா பல்கலைக்கழகக் கலைக் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, ​​அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) மற்றும் டிஆர்எஸ் உடன் இணைந்த மாணவர் சங்கங்கள் எதிர்ப்புப் போராட்டங்களை ஏற்பாடு செய்தன. தெலுங்கானா நிருத்யோக் வித்யார்த்தி கூட்டு நடவடிக்கைக் குழுவின் (ஜேஏசி) மானவ்தா ராய், நிர்வாகம் தனது முடிவை இன்னும் எழுத்துப்பூர்வமாக மாணவர்களுக்கு தெரிவிக்கவில்லை என்றார். மேலும், "நிர்வாகம் திங்களன்று ஏதாவது சொல்லும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்றும் அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்: இலங்கைக்கு உதவும் ஸ்டாலினின் தீர்மானம்; மாநில உரிமை மற்றும் கடந்த கால வரலாற்றை மாற்றும் முயற்சி

மேடக் மாவட்டத்தில் உள்ள சங்கரெட்டி தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜக்கா ரெட்டி, ராகுல் காந்தியின் உஸ்மானியா பல்கலைக்கழக பயணத்தை நிறுத்துமாறு மாநில அரசு பல்கலைக்கழகத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக குற்றம் சாட்டினார். மேலும், “உஸ்மானியா பல்கலைக்கழகம் எப்போதும் தெலுங்கானா போராட்டம் உட்பட மாணவர் இயக்கங்களுக்கு பெயர் பெற்றது. எங்கள் தலைவரின் வருகை அரசியல் சாராதது என்பதை நாங்கள் தெளிவுபடுத்தினோம், ஆனால் அவர்கள் அதை அனுமதிக்கக்கூடாது என்று முடிவு செய்தனர், ”என்றும் அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.

முன்னாள் ராஜ்யசபா எம்பி ஹனுமந்த ராவும் பல்கலைக்கழகம் மற்றும் மாநில அரசை விமர்சித்தார். இந்தநிலையில், மே 6-ம் தேதி வாரங்கல் அருகே ஹனம்கொண்டாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றிவிட்டு கரீம்நகருக்குச் செல்ல உள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Telangana Rahul Gandhi Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment