ராணுவ தினத்தை முன்னிட்டு, இந்திய ராணுவத்தின் அமைதிக்கான விருப்பம் அதன் "நிலையான பலத்திலிருந்து" பெறப்பட்டது, அதை தவறாக கருத வேண்டாம் என்று ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவனே கூறினார். எல்லை கட்டுப்பாட்டு பகுதியில், சீனாவுடன் நடந்து வரும் மோதலின் பின்னணியை கருத்தில் கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எங்கள் எல்லையில் உள்ள நிலையை ஒருதலைபட்சமாக மாற்றும் எந்தவொரு முயற்சியையும் எதிர்கொள்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். "அமைதிக்கான எங்கள் விருப்பம் எங்களின் நிலையான பலத்திலிருந்து பிறந்தது, அதை தவறாக நினைக்கக்கூடாது," என்று அவர் கூறினார்.
இதுகுறித்து நரவனே கூறுகையில், "இராணுவத் தாக்குதலின் எந்த முயற்சியையும் தடுக்க இராணுவம் கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளது" மற்றும் "சமமான, பரஸ்பர பாதுகாப்பு கொள்கையின் அடிப்படையில், நிறுவப்பட்ட விதிமுறைகள் மூலம் கருத்து வேறுபாடுகள் சிறந்த முறையில் தீர்க்கப்படுகின்றன என்று நாங்கள் நம்புகிறோம்.
எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை ஒட்டிய, ஹாட் ஸ்பிரிங்ஸ், டெப்சாங் சமவெளி மற்றும் டெம்சோக்கில் இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லை. "எல்லைகள் மற்றும் உள்நாடு இரண்டிலும் அரசு ஆதரவால், பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்று நரவனே தெரிவித்தார்.
முன்னதாக கிழக்கு லடாக்கின் பாங்காக் ஏரி பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம், இருநாட்டு ராணுவ வீரா்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து, இருதரப்பிலும் ஆயுதங்களுடன் ஆயிரக்கணக்கான ராணுவ வீரா்கள் எல்லையில் குவிக்கப்பட்டதால், போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.
அதன்பிறகு இந்தியா, சீனா தரப்பில் நடைபெற்ற ராணுவ ரீதியிலான பலசுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னா், கடந்த ஆண்டில் பாங்காக் ஏரியின் வடக்கு, தெற்கு பகுதியிலும், கோக்ராவிலும்’ இருநாட்டு ராணுவ வீரா்களும் திரும்பப் பெறப்பட்டனா். தற்போது கிழக்கு லடாக்கின் சா்ச்சைக்குரிய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இருநாடுகளும் தலா 50,000 முதல் 60,000 ராணுவ வீரா்களை நிறுத்தியுள்ளன.
இதுவரை14 சுற்று இராணுவ அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர், சமீபத்தியது புதன்கிழமை நடைபெற்றது. இதில், எல்லையில் சச்சரவுக்குரிய பகுதியில் இருநாடுகளும் படைகளைத் திரும்பப் பெற வேண்டுமென இந்தியா வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “