உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பணி நாளையுடன் நிறைவடைகிறது

ஆதார், பீமா கோரேகான், ஓரினச் சேர்க்கையாளர்கள், சபரி மலையில் பெண்களுக்கு அனுமதி என முக்கியமான வழக்குகளில் தீர்ப்பை வழங்கியவர்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு : உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயலாற்றி வரும் தீபக் மிஸ்ராவின் கடைசி பணி நாள் நாளையுடன் முடிவடைகிறது.  கடந்த பத்து நாட்களில் உச்ச நீதிமன்றத்தில் இவர் அளித்த தீர்ப்புகள் இந்திய வரலாற்றில் என்றும் நீங்காத இடத்தினைப் பிடிக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நாளை ஓய்வு

நீதிமன்றத்தில் அவர் இருந்த போது அவருக்காக வழக்கறிஞர் ஒருவர் பிரபல இந்திப் பாடலான தும் ஜியோ ஹஜாரோன் சால் என்ற பாடலை பாடத் துவங்கி வாழ்த்துகளை பகிர முற்பட்ட போது அதை அழகாக நிராகரித்துவிட்டார் தீபக் மிஸ்ரா. இப்போது நான் என்னுடைய இதயம் என்ன சொல்கிறதோ அதைக் கேட்கிறேன். ஆனால் மூளை என்ன சொல்ல விரும்புகிறதோ அதை இன்று மாலை கேட்டு நடப்பேன் என்று கூறியிருக்கிறார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

அவரின் ஓய்விற்கு பின்னர் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் அக்டோபர் மூன்றாம் தேதியில் இருந்து பதவி ஏற்க உள்ளார். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் மற்றும் ப்ரசாந்த் பூஷன் தீபக் மிஸ்ராவின் இரண்டு தீர்ப்புகள் குறித்து சர்ச்சையாக ட்வீட்கள் செய்துள்ளனர். இது குறித்து கேள்வி எழுப்பிய போது பெஞ்ச் இதற்கு பதில் சொல்ல மறுத்துவிட்டது.

ஆதார், பீமா கோரேகான், ஓரினச் சேர்க்கையாளர்கள், சபரி மலையில் பெண்களுக்கு அனுமதி என முக்கியமான வழக்குகளில் தீர்ப்பை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கடந்து வந்த பாதை

ஒரிசா உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக 1996ம் ஆண்டு, ஜனவரி 17ம் தேதி பொறுப்பேற்றார். அதற்கு பின்பு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்றார். பட்னா உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக டிசம்பர் 23ம் தேதி 2009ம் ஆண்டு பதவியேற்றார். 2010ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மே 24ம் தேதி, 2010ம் ஆண்டு பதவியேற்றார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி பதவியேற்றார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close