Uttarakhand Tunnel Collapse: உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சில்க்யாரா என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ.12) காலை நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த சுரங்கப்பாதையில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும், காவல்துறை, உள்ளூர் நிர்வாகம் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுக்கள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டன.
தொழிலாளர்களை மீட்க ஐந்து ஆம்புலன்ஸ் வாகனங்களும் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. முதன்மைத் தகவலின்படி, சுரங்கப்பாதையின் நுழைவாயிலிலிருந்து 200 மீ தொலைவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
அச்சமயத்தில் 2800 தொழிலாளர்கள் நுழைவுப் பாதையில் இருந்துள்ளனர். இந்த நிலையில், உள்ளே உள்ள தொழிலாளர்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கிடைத்தாலும், சுரங்கப்பாதைக்குள் கூடுதல் ஆக்ஸிஜன் குழாயும் வழங்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் வாசிக்க : Uttarakhand Tunnel Collapse: Over 30 workers feared trapped as under-construction tunnel
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“