Over 33000 condoms are ordered in online on New year’s eve: புத்தாண்டுக்கு முதல் நாளில் 33,000 ஆணுறைகள் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக சொமாட்டோ நிறுவனர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கடந்த டிசம்பர் 31 அன்று ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆரம்பமானது. வழக்கமாக உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியாவில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் இரவு கேளிக்கைகளுடன் கொண்டாட்டப்படும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கடுமையாக கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கொண்டாடப்பட்டது. பொது இடங்களில் இரவு நேரம் கூட்டம் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், இந்த ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாகவே இருந்தது. குறிப்பாக உலக நாடுகளில் உயர்ந்த கட்டிடங்களில் லேசர் லைட், பட்டாசு என ஆரவராமாக மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
இந்தநிலையில், இந்தியாவின் பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனமான சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் புத்தாண்டுக்கு முதல் நாள் விற்பனை செய்யப்பட்ட பொருள்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யும் பிளின்கிட் தளத்தில் புத்தாண்டுக்கு முந்தைய நாளில் மட்டும் 33,000 ஆணுறைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரே ஒரு வாடிக்கையாளர் மட்டும் 80 ஆணுறைகளை வாங்கியுள்ளார்.
மேலும், 1.3 லட்சம் லிட்டர் சோடா, 43,000 பாட்டில்கள் குளிர்பானங்கள், 6,712 டப் ஐஸ்க்ரீம், 28,240 பாப்கார்ன் அந்த தளத்தில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. மேலும், 10,000 கொரோனா சுயசோதனை கருவியும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 31-ம் தேதி மாலை 7 மணி நிலவரப்படி சொமாட்டோவுக்கு ஒரு நிமிடத்துக்கு 7,100 ஆர்டர்களும், ஸ்விக்கிக்கு ஒரு நிமிடத்துக்கு 9,000 ஆர்டர்களும் வந்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”