scorecardresearch

100 நாள் வேலை திட்டத்தில் ரூ.4,720.22 கோடி ஊதிய நிலுவைத் தொகை: நாடாளுமன்றத்தில் தகவல்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்படவேண்டிய 4,720.22 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் ஊரக வளர்ச்சி துறைக்கான இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்தார்.

100 நாள் வேலை திட்டத்தில் ரூ.4,720.22 கோடி ஊதிய நிலுவைத் தொகை: நாடாளுமன்றத்தில் தகவல்

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள கிராமபுறங்களில் 100 நாள் வேலை வழங்கப்படுகிறது. இந்ததிட்டம் குறித்து மாநிலங்களவை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு ஊரக வளர்ச்சி துறைக்கான இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துபூர்வமாக பதில் அளித்தார்.

அதில், “ஜூலை 21, 2022 வரை இந்ததிட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு வழங்கப்படவேண்டிய ஊதிய தொகை ரூ.4,720.22 கோடி நிலுவையில் உள்ளது. இதில் அதிகபட்சமாக மேற்கு வங்கத்திற்கு ரூ. 2620.87 கோடி, பீகார் மாநிலத்திற்கு ரூ. 1067.83, உத்தரப் பிரதேசத்திற்கு ரூ. 447.87 கோடி நிலுவையில் உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம், குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலும் நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டியுள்ளது. ஊதிய நிலுவைத் தொகை தவிர, பொருட்களுக்கு வழங்கபட வேண்டிய தொகை ரூ.2,537.32 கோடி நிலுவையில் உள்ளது என ஜோதி தெரிவித்தார்.

மாநிலங்களுக்கு நிதி விடுவிப்பது தொடர்ச்சியான செயல்முறையாகும். திட்டத்தை செயல்படுத்த மாநிலங்களுக்கு நிதி வழங்கப்படுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Over rs 4700 crore liabilities of mgnrega pending till july 21 centre informs parliament