Hamza Khan
அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் ராஜஸ்தானில் தேர்தல் தேதியை நவம்பர் 23 இல் இருந்து நவம்பர் 25 ஆம் தேதிக்கு மாற்றியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Overdose of weddings, Election Commission changes polling date for Rajasthan
நவம்பர் 23 ஆம் தேதி தேவுதானி ஏகாதசி அன்று வருகிறது, இது பலரால் மங்களகரமான நாளாகக் கருதப்படுகிறது, அந்நாளில் ராஜஸ்தானில் ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெறும்.
தேர்தல் தேதியை மாற்ற தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்தவர்களில் மக்களவை எம்.பி பி.பி சவுத்ரி-யும் ஒருவர். அவர், வாக்குப்பதிவு நாள் "கலாச்சார மற்றும் மத பக்தியுடன் தொடர்புடைய தேவுதானி ஏகாதசி என்ற மிகப் பெரிய திருவிழாவுடன் ஒத்துப்போகிறது. இவ்விழாவில், கோடிக்கணக்கான பக்தர்கள் நதிகள், மானசரோவர் மற்றும் புனித ஸ்தலங்களுக்கு சென்று நீராடுகின்றனர். இந்த பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டாலும், ராஜஸ்தானில் இது பெரும் செல்வாக்கைக் கொண்டுள்ளது, அங்கு இது 'அபுஜ் சாவே' என்று அறியப்படுகிறது," என்று கூறினார்.
ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் இருந்து மூத்த குடிமக்கள், இளைஞர்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து தனக்கு ஏராளமான கடிதங்கள் வந்ததாக பி.பி சவுத்ரி கூறினார். இந்த பெருவிழாவைக் கருத்தில் கொண்டு, (தற்போதைய வாக்குப்பதிவு தேதிக்கு) இரண்டு நாட்களுக்கு முன்னதாகவோ அல்லது அதற்குப் பின்னரோ வாக்குப்பதிவை நடத்த அவர்கள் சிறப்பு வேண்டுகோள் விடுத்தனர்.
அன்றைய தினம் திருமண சீசனின் தொடக்கத்தையும் குறிக்கிறது.
அன்றைய தினம் 50,000க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும் என்று ஊடக அறிக்கைகளை மேற்கோள்காட்டி பி.பி சவுத்ரி கூறினார். “உறவினர்கள், உணவு தயாரிப்பாளர்கள், கூடார சேவைகள், இசைக்குழுக்கள் உட்பட பல்வேறு பிரிவுகள் ஒரு திருமணத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ளன. மேலும், மக்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்வார்கள். இரண்டு சூழ்நிலைகளிலும், அவர்கள் தங்கள் வேலையை அல்லது செயல்பாட்டை விட்டுவிட்டு வாக்களிக்கச் செல்ல முடியாது,” என்று சவுத்ரி கூறினார்.
"வாக்களிக்கும் சதவீதத்தை அதிகரிப்பது எங்கள் பொறுப்பு மற்றும் தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு... ராஜஸ்தானில் ஒரு பெரிய திருவிழாவில் வாக்களிக்க ஏற்பாடு செய்வது, வாக்களிக்கும் விழிப்புணர்வு குறித்த தேர்தல் ஆணையத்தின் தீர்மானத்தை நேரடியாகப் பாதிக்கும்" என்று பி.பி சவுத்ரி கூறினார்.
புதன்கிழமை, தேர்தல் ஆணையம் கூறியது, “அந்த நாளில் பெரிய அளவிலான திருமணம்/ சமூக நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, அதாவது பல்வேறு ஊடக தளங்களில் எழுப்பப்பட்ட பிரச்சனைகளான, அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம், பல்வேறு தளவாட சிக்கல்கள் மற்றும் வாக்கெடுப்பின் போது வாக்காளர்கள் பங்கேற்பு குறைவதற்கு வழிவகுக்கும் என்பதால், வாக்கெடுப்பு தேதியை மாற்றுவது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்தது.”
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“