ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, நேற்று முன்தினம் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு டெல்லி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் கார் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. நல்வாய்ப்பாக காயமின்றி தப்பித்தார். இதற்கிடையில், மனைவியை இரவு உணவிற்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்த ஒவைசி, உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருந்ததால், வியாழன் அன்று டெல்லியில் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்,
வீட்டிற்கு வந்த போது, தனது மனைவி வெளியே கிளம்பு தயாராக இருப்பதை பார்த்துவிட்டு, துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். ஆனால் அவரது மனைவி அதை நம்பவில்லை. வெளியே செல்வதைத் தவிர்க்க ஒரு கதையை உருவாக்குகிறார் என நினைத்தார். பின்னர், டிவியை பார்க்கும்படி மனைவியிடம் தெரிவித்தார். அப்போது இச்சம்பத்தை அறிந்து விரைந்த வந்த அவரது மகள், அப்பா சொல்வது உண்மை என கூறியதையடுத்துதான், அவரதுமனைவி நம்பியுள்ளார். இதுகுறித்து பேசிய ஓவைசி, புல்லட்டில் இருந்து தப்பித்தேன், ஆனால் மனைவியின் சந்தேகப் பார்வையில் இருந்து தப்புவது மிகவும் கடினம் என தெரிவித்தார்.
குழு முடிவும், மக்கள் தீர்ப்பும்
பாதுகாப்பு அமைச்சகம், முதன்முறையாக, popular choice என்ற விருது பிரிவை உருவாக்கியது. இந்த பிரிவில் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள், அணிவகுப்புக் குழுவினரில் பிரபலமானவர்கள் மக்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
இந்த விருதானது, நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட விருது அல்லாமல், கூடுதலாக வழங்கப்படுகிறது. சுவாரஸ்யமாக, குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள் யாரும் பிரபலமான தேர்வு விருதுகளை வெல்லவில்லை
நடுவர் குழு, ஐ ஆயுதப்படைகள் மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படைக்கான சிறந்த அணிவகுப்பு குழுவாக, இந்திய கடற்படை மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையை(CISF)தேர்வு செய்தது. ஆனால், மக்கள் வாக்கெடுப்பில் விமானப்படை மற்றும் சிஆர்பிஎஃப் படைகள் தேர்வு செய்யப்பட்டன.
அதேபோல், நடுவர் குழு உத்தரப் பிரதேச மாநில அலங்கார ஊர்தியையும், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஊர்தியையும் தேர்ந்தெடுத்தது. ஆனால், மக்கள் மகாராஷ்டிரா மற்றும் அஞ்சல் துறை, தகவல் தொடர்பு அமைச்சகத்தின் அலங்கார ஊர்திக்கு வாக்களித்தனர்.
இந்த Popular Choice விருதுக்கு, ஜனவரி 25 முதல் 31 வரை MyGov தளம் மூலம் மக்கள் வாக்களித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil