கொரோனா பாதிப்பு: ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி

இந்த முடிவு உலகிலேயே 2வது அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தடுப்பூசி போடுவதற்கு வழி வகுக்கும். உலகில் அமெரிக்காவிற்குப் பிறகு, இந்தியா அதிக எண்ணிக்கையிலான கோவிட்-19 தொற்றுகளைக் கொண்டுள்ளது.

oxford astrazeneca, covid 19 vaccine, india approval coronavirus vaccine, Covishield, coronavirus vaccine, கொரோனா வைரஸ், கோவிட்-19, ஆக்ஸ்போர்டு, அஸ்ட்ராஜெனேகா, ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனேகா கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு அனுமதி, இந்தியா, coronavirus oxford vaccine, oxford-astrazeneca vaccine, covishield vaccine india, serum institute of india, india coronavirus vaccine, vaccine news india

இந்தியாவின் மருந்து ஒழுங்குமுறை அமைப்பு அவசரகால பயன்பாட்டிற்காக அஸ்ட்ராஜெனேகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த முடிவு உலகிலேயே 2வது அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தடுப்பூசி போடுவதற்கு வழி வகுக்கும். உலகில் அமெரிக்காவிற்குப் பிறகு, இந்தியா அதிக எண்ணிக்கையிலான கோவிட்-19 தொற்றுகளைக் கொண்டுள்ளது.

பிரிட்டன் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகள் அவசரகால பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தடுப்பூசிக்கு ஏற்கனவே அங்கீகாரம் அளித்துள்ளன.

இந்தியாவின் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சி.டி.எஸ்.கோ) வல்லுநர்கள் இந்த வாரம் 2வது முறையாக சந்தித்து வருகின்றனர். அதனால், பாரத் பயோடெக் நிறுவனம் உள்நாட்டில் உருவாக்கிய தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கலாம் என்று பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு வட்டாரங்கள் தெரிவித்தன.

“அஸ்ட்ராஜெனெகா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய இரண்டு நிறுவனங்களும் தடுப்பூசிக்கு இன்று ஒப்புதல் பெறும்” என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது. “அனைத்து தயாரிப்புகளிலும் இன்றைய தேதியைக் குறிப்பிட திட்டமிட்டுள்ளதாக” கூறப்படுகிறது.

மற்ற சில வட்டாரங்கள் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசிக்கான ஒப்புதல் அளிக்கும் வாய்ப்புகள் குறித்து குறைவாகவே இருப்பதாகவே தெரிவித்தன.

இது குறித்து மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சி.டி.எஸ்.கோ) பிரதிநிதி ஒருவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். 1 கோடிக்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்றுகளைக்கொண்ட நாட்டில் தடுப்பூசி விநியோகத்திற்காக நாடு தழுவிய ஒத்திகை நடத்துவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த குழு கூடியுள்ளது.

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் 50 மில்லியனுக்கும் அதிகமான மருந்துகள் ஏற்கனவே அதன் உள்ளூர் உற்பத்தியாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) மூலம் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் மருந்துகள் குளிர்ந்த சேமிப்பு நிலையங்களிலிருந்து இந்திய மாநிலங்களுக்கு சனிக்கிழமை கொண்டு செல்லத் தொடங்கலாம் என்று ஒரு வட்டாரம் தெரிவிதது.

இது குறித்து கருத்து கேட்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா உடனடியாக பதிலளிக்கவில்லை.

ஜெர்மனியின் பயோஎன்டெக் உடன் உருவாக்கிய தடுப்பூசியின் அவசர அங்கீகாரத்திற்கான தரவை வழங்க ஃபைசர் இன்க் நிறுவனம் மேலும் அதிக காலம் கோரியதாக அரசாங்கம் புதன்கிழமை கூறியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Oxford astrazeneca covid 19 vaccine india approval coronavirus vaccine

Next Story
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்; முரணாக பேசும் பாஜக எம்.எல்.ஏ!Kerala farm laws, Farm laws Kerala assembly, Kerala BJP O Rajagopal, O Rajagopal Kerala, kerala BJP farm laws, indian express news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com