கோவாவில் உள்ள 40 தொகுதிகளுக்கும் பிப்ரவரி 14-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக அல்லாத வாக்குகளை ஆம் ஆத்மி மட்டுமே பிரிக்கும் என்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தின் விமர்சனத்துக்கு ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலும் பதிலடி கொடுத்துள்ளார்.
சிதம்பரத்தை கடுமையாக விமர்சித்த ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், கோவா மக்கள் எங்கே நம்பிக்கை பார்க்கிறார்களோ அவரக்ளுக்கு வாக்களிப்பார்கள் என்றும், “காங்கிரஸ் என்பது பாஜகவுக்கான நம்பிக்கை, கோவா மக்களுக்கு அல்ல” என்றும் கூறினார். தேர்தலில் வாக்குகள் பிளவுபடுவதைப் பற்றி கத்துவடை நிறுத்துங்கள் என்று கெஜ்ரிவால், ப.சிதம்பரத்திடம் கேட்டுக்கொண்டார்.
கோவாவில் ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் பாஜக அல்லாத வாக்குகளை மட்டுமே பிரிக்கும் என்பதை அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி செய்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் திங்கள்கிழமை கூறினார். கோவாவில் உண்மையான போட்டி காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையேதான் இருக்கும் என்று ப.சிதம்பரம் உறுதியாகக் கூறினார்.
தேர்தலில் காங்கிரஸைத் தேர்ந்தெடுக்குமாறு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து கோவா சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸின் மூத்த தேர்தல் பார்வையாளராக இருக்கும் சிதம்பரம் ட்வீட் செய்தார். “கோவாவில் பாஜக அல்லாத வாக்குகளை ஆம் ஆத்மியும் டிஎம்சியும் பிரிக்கும் என்ற எனது மதிப்பீடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால். கோவாவில் காங்கிரஸ் - பாஜக இடையேதான் போட்டி நிலவுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
“கோவாவில் ஆட்சி மாற்றத்தை விரும்புபவர்கள் (10 வருட தவறான ஆட்சிக்குப் பிறகு) காங்கிரஸுக்கு வாக்களிப்பார்கள். ஆட்சி தொடர வேண்டும் என்று நினைப்பவர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள். கோவாவில் வாக்காளரின் முன் உள்ள வாய்ப்புகள் வெளிப்படையாகவும் தெளிவாகவும் உள்ளது. உங்களுக்கு ஆட்சி மாற்றம் வேண்டுமா வேண்டாமா” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கேட்டுள்ளார்.
“ஆட்சி மாற்றத்திற்கு வாங்களிக்க விரும்புபவர்கள் காங்கிரசுக்கு வாக்களிக்குமாறு கோவா வாக்காளர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று ப. சிதம்பரம் கூறினார்.
கோவாவில் பிப்ரவரி 14-ம் தேதி நடைபெறும் தேர்தலில் வாக்குகள் பிரிந்தால், கோவாவில் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கத் தயாராக இருப்பதாக கெஜ்ரிவாலின் கருத்துக்குப் பிறகு ப. சிதம்பரத்தின் கருத்துக்கள் வந்துள்ளன.
ப. சிதம்பரத்தை கடுமையாக விமர்சித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், கோவா மக்கள் நம்பிக்கை எங்கே நம்பிக்கையை பார்க்கிறார்களோ அவர்களுக்கு வாக்களிப்பார்கள் என்றும், “காங்கிரஸ் என்பது பாஜகவுக்கான நம்பிக்கை, கோவா மக்களுக்கு அல்ல” என்றும் கூறினார். வாக்குகள் பிளவுபடுவதைப் பற்றி புலம்புவதை நிறுத்துங்கள் என்றும் அவர் ப. சிதம்பரத்திடம் கேட்டுக்கொண்டார்.
“கோவா மக்கள் நம்பிக்கையைப் பார்க்கும் இடத்தில் வாக்களிப்பார்கள். காங்கிரஸ் என்பது பாஜகவுக்கான நம்பிக்கை. கோவா மக்களுக்கு அல்ல. உங்கள் 17 எம்.எல்.ஏ.க்களில் 15 பேர் பாஜகவுக்கு மாறிவிட்டனர்” என்று ப. சிதம்பரத்தின் ட்வீட்களை டேக் செய்து கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.
“மற்ற அரசியல் கட்சிகளின் ராஜநீதி எங்களுக்குப் புரியவில்லை. நாங்கள் மிகவும் எளிமையான, அப்பாவி மக்கள்… இந்த எதிர்க்கட்சி ஒற்றுமை, அனைவரும் சேர்ந்து ஒரு கட்சியை தோற்கடிப்போம், இந்த தலைவரை தோற்கடிப்போம்… மக்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மக்கள் தங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும், தங்கள் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும், குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தால், அவர்கள் நல்ல சிகிச்சை பெற வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம். வளர்ச்சியை எப்படி கொண்டு வருவது என்று எனக்கு தெரியும். மற்ற அரசியல் கட்சிகள் அனைவரும் அங்கே அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் இரவு முழுவதும் இதைச் செய்கிறார்கள்” என்று கெஜ்ரிவால் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.