INX Case Updates : சிதம்பரம் வீட்டின் சுவர் ஏறி குதித்து சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ – பரபரப்பு காட்சிகள்

Chidambaram INX Media Case News: டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்

INX Case Live Updates
INX Case Live Updates

Chidambaram INX Media Case Updates:  ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மத்திய நிதி அமைச்சராக பணியாற்றினார் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம். 2007ம் ஆண்டு ப.சிதம்பரம்  ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து அந்நிய நேரடி  முதலீடாக ரூ.305 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது.

P Chidambaram bail updates

அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் (Foreign Investment Promotion Board – FIPB) கீழ் வழங்கப்பட்ட ஒப்புதலில் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ தனித்தனியாக விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கில் கைதாகாமல் இருக்க, முன்ஜாமீன்  மனுக்களை பெற்று வந்தார் ப.சிதம்பரம். இதனால் அவரை கைது செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டே வந்தது. ஆனால் நேற்று டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் மனு வழங்க மறுத்துவிட்டது. ஐ.என்.எக்ஸ் நிறுவனத்தின்  முன்னாள் நிறுவனர் இந்திராணி முகர்ஜி இந்த வழக்கில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பான முழுமையான தகவல்களை ஆங்கிலத்தில் உடனுக்குடன் அறிந்து கொள்ள

அதனைத் தொடர்ந்து, மேல் முறையீட்டிற்காக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர் ப.சிதம்பரத்தின் சட்ட ஆலோசகர்கள். இன்று காலை விசாரணைக்கு வருகிறது இந்த மேல்முறையீடு.  இந்நிலையில் நேற்றிரவு, சி.பி.ஐ. அதிகாரிகள், புதுடெல்லி, ஜோர்பாக்கில் அமைந்திருக்கும் சிதம்பரத்தின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இரண்டு முறை அவரின் வீட்டிற்கு சென்றும், அவர் அங்கு இல்லாததால் விரைவில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்துவிட்டு வந்தனர். இந்நிலையில் இன்று காலை மூன்றாவது முறையாக ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு சென்றுள்ளனர் சி.பி.ஐ. அதிகாரிகள்.

மேலும் படிக்க :ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி; உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

Live Blog

இன்று காலை மூன்றாவது முறையாக சி.பி.ஐ. அதிகாரிகள், ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு சென்று, அவர் உள்ளாரா என்று சோதனையிட்டுள்ளனர்.


23:54 (IST)21 Aug 2019

சிதம்பரம் விளைச்சது விளைந்திருக்கிறது – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ப.சிதம்பரம் கைது குறித்து பேசிய பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘ப.சிதம்பரம் விளைச்சது விளைந்திருக்கிறது’ என்றார்.

23:46 (IST)21 Aug 2019

ப.சிதம்பரத்துக்கு மருத்துவ பரிசோதனை

சிபிஐ தலைமை அலுவலகத்துக்கே நேரில் வரவழைக்கப்பட்ட மருத்துவர்கள், ப.சிதம்பரத்துக்கு மருத்துவ பரிசோதனை செய்த பிறகு வெளியேறிய காட்சி

 

Delhi: A team of doctors leaves from Central Bureau of Investigation (CBI) headquarters after conducting medical tests of P. Chidambaram. pic.twitter.com/pL1X76ELzX

— ANI (@ANI) August 21, 2019

23:41 (IST)21 Aug 2019

கூட்டணிக் கட்சித் தலைவர் ஸ்டாலின் ஏன் கைதை எதிர்க்கவில்லை? – கராத்தே தியாகராஜன்

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு கூட்டணிக் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அழுத்தமான எதிர்ப்பைப் பதிவு செய்யவில்லை. அது வருத்தமாக உள்ளது. கே.எஸ்.அழகிரி கூட பேசிவிட்டார். ஸ்டாலின் இன்னும் அறிக்கை விடவில்லை என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

23:36 (IST)21 Aug 2019

சிதம்பரம் 10-15 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரணை?

ப.சிதம்பரம் நாளை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திலோ அல்லது வேறு ஒரு அமர்விலோ ஆஜர்படுத்தவிருக்கிறார். அப்போது, சிதம்பரத்தை 10-15 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

23:13 (IST)21 Aug 2019

சிபிஐ அலுவலகத்தை விட்டு வெளியே அழைத்து வரப் போவதில்லை – சிபிஐ

டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் நாளை ஆஜர்படுத்தப்படுகிறார். நாளை மதியம் வரை சிபிஐ அலுவலகத்தை விட்டு வெளியே அழைத்துவரப்போவதில்லை; ப.சிதம்பரத்திற்கான மருத்துவமனை பரிசோதனை கூட சிபிஐ அலுவலகத்திலேயே நடைபெறும் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

23:01 (IST)21 Aug 2019

அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன?

சிதம்பரத்துடன் அவருடைய நண்பர்களும், வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித் மற்றும் கபில் சிபல் உள்ளனர். அவர் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளார். சிபிஐ ஒருவரை கைது செய்கிறது என்றால், அவரை 24 மணி நேரத்திற்குள் சிபிஐ நீதிபதி முன்பு ஆஜர்படுத்த வேண்டும். இதனால், அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படலாம் என தெரிகிறது. தவிர, சிதம்பரத்துக்கு தற்போது மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில், நாளை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அமலாக்கப்பிரிவு அனுமதியை கோரும். இதற்கிடையே, சிதம்பரம் டீம் நாளை ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்ய உள்ளது. எஃப்.ஐ.ஆரில் சிதம்பரம் பெயர் இல்லாததால், அவருக்கு நாளை ஜாமீன் கிடைக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

22:44 (IST)21 Aug 2019

தமிழகத்துக்கே தலைகுனிவு – தமிழிசை

தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதி கைது செய்யப்பட்டிருப்பது தலைகுனிவுதான். கைது செய்யும் நிகழ்வுவரை கொண்டு சென்றது ப.சிதம்பரம் தான் என தமிழிசை தெரிவித்துள்ளார்.

22:39 (IST)21 Aug 2019

சிபிஐ தலைமை அலுவலகத்தில் சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் வழக்கில் முன்ஜாமீன் கிடைக்காத நிலையில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

22:38 (IST)21 Aug 2019

ப.சிதம்பரம் ஒரு பயங்கரவாதி அல்ல – திருமாவளவன்

ப.சிதம்பரம் ஒரு பயங்கரவாதி அல்ல; நாட்டின் உள்துறை, நிதி அமைச்சராக இருந்தவர். ப.சிதம்பரத்திற்கு எதிரான பழிவாங்கும் போக்கை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

22:37 (IST)21 Aug 2019

ப.சிதம்பரம் கைது ஜனநாயக படுகொலை – கே.எஸ்.அழகிரி

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை. மத்திய பாஜக அரசு தவறான முன்னுதாரணத்தை உருவாக்க முயற்சிக்கிறது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

22:34 (IST)21 Aug 2019

இது பழிவாங்கும் நடவடிக்கை – டி.கே.எஸ். இளங்கோவன்

இது பழிவாங்கும் நடவடிக்கையே என்பது வெளிப்படையாக தெரிகிறது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் விசாரணைக்கு வரும் நிலையில் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

22:33 (IST)21 Aug 2019

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கைது – கார்த்தி சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் வழக்கில் எதையும் சட்டப்படி சந்திப்போம்; எனது தந்தை எங்கும் ஓடி ஒளியவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வழக்கு ஜோடிக்கப்பட்டு எனது தந்தையை கைது செய்துள்ளனர் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

21:59 (IST)21 Aug 2019

ப.சிதம்பரம் கைது

சிதம்பரத்தை கைது செய்து அழைத்துச் சென்றிருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சிதம்பரத்தை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்கிறது.

21:48 (IST)21 Aug 2019

சிதம்பரத்தை அழைத்துச் சென்றது சிபிஐ

சுமார் ஒருமணி நேர போராட்டத்திற்குப் பிறகு, முன்னாள் மூத்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டில் இருந்து அழைத்துச் சென்றனர். 

21:03 (IST)21 Aug 2019

சிதம்பரம் வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்த சிபிஐ

காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிறகு சிதம்பரம் தனது வீட்டிற்குச் சென்றுவிட்டார். அவரை பின் தொடர்ந்து சென்ற சிபிஐ அதிகாரிகள், சிதம்பரம் வீட்டின் கேட் திறக்கப்படாததால், காம்பவுண்ட் சுவர் ஏறி வீட்டிற்குள் சென்றிருக்கின்றனர். 

20:30 (IST)21 Aug 2019

செய்தியாளர்களை சந்தித்த சிதம்பரம்

காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், “ஐஎன்எக்ஸ் வழக்கில் என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் இதுவரை எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. சட்டத்திற்கு பயந்து நான் தலைமறைவானதாக வெளியாகும் செய்திகளை நான் கடுமையாக மறுக்கிறேன். எனது மனுவை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. சட்டத்தை நான் முழுதாக நம்புகிறேன்” என்று தெரிவித்து இருக்கிறார். 

17:16 (IST)21 Aug 2019

போராடிய ப.சிதம்பரம் தரப்பு

ப.சிதம்பரம் தரப்பில் மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்கும்படி நீதிபதி என்.வி.ரமணாவிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், வழக்கை விசாரிக்க மறுத்த நீதிபதி ரமணா, இந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு அனுப்பி வைத்தார்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, அயோத்தி வழக்கை விசாரித்து வருவதால் ப.சிதம்பரம் மனுவை அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டது.

எனவே, இன்று பிற்பகல் மீண்டும் நீதிபதி என்.வி.ரமணாவிடம் ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் முறையிட்டனர். அப்போது, “உங்கள் வழக்கை இன்றைய விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில் எப்படி விசாரிக்க முடியும்? உங்கள் மேல்முறையீட்டு மனுவில் பிழைகள் உள்ளன. அந்த பிழைகளை சரி செய்து புதிய மனுவை தாக்கல் செய்யுங்கள். அந்த மனு பட்டியலிடப்பட்டு அதன்பிறகு விசாரணை நடத்தப்படும்” என்று நீதிபதி ரமணா தெரிவித்தார்.

இந்நிலையில், நாளை மறுநாள் (ஆக.23) இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

16:23 (IST)21 Aug 2019

சிதம்பரத்தை எதிர்க்க தயார் – சிபிஐ வழக்கறிஞர்

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பாக ஆஜராகி வாதாடும் துஷார் மேத்தா, “சிதம்பரத்தின் எந்த நகர்வையும் எதிர்க்க நாங்கள் முழுவதும் தயாராகிவிட்டோம்” என்று தெரிவித்ததாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

15:17 (IST)21 Aug 2019

ப. சிதம்பரத்தின் வழக்கு குறித்து 4 மணிக்கு தலைமை நீதிபதியிடம் முறையிடுகிறார் கபில்சிபில்

ப.சிதம்பரத்தின் மனுவை மீண்டும் நீதிபதி ரமணா ஏற்க மறுத்த நிலையில் ப. சிதம்பரத்தின் வழக்கு குறித்து 4 மணிக்கு தலைமை நீதிபதியிடம் கபில்சிபில் முறையிட உள்ளார். மேலும் சிதம்பரம் எங்கும் தப்பிச்செல்ல மாட்டார் என நான் உறுதி அளிக்கின்றேன் என்றும் கபில்சிபில் பேச்சு.

14:27 (IST)21 Aug 2019

மேல் முறையீட்டு மனுவில் குறை

ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவுக்கு தடை விதித்தது டெல்லி உயர்நீதிமன்றம். இன்று காலையில் அவசர வழக்காக விசாரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி அமர்வுக்கு வரவில்லை. அதற்கான காரணங்களை அறிய விளக்க பதிவாளரை நீதிமன்ற அறைக்கு வர நீதிபதி ரமணா உத்தரவிட்டார். அப்போது ப.சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்ப்பட்ட மனுவில் குறைப்பாடு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. குறைகள் நீக்கப்பட்டால் மட்டுமே விசாரணை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

13:49 (IST)21 Aug 2019

ப. சிதம்பரத்தின் மீதான இந்த வழக்கில் அரசியல் வெறுப்பு உள்ளது – முக ஸ்டாலின்

ப.சிதம்பரம் மீதான ஐ.என்.எக்ஸ் வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருப்பதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

12:54 (IST)21 Aug 2019

ராகுல் காந்தி கண்டனம்

சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையை பயன்படுத்தி ப.சிதம்பரத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைக்கிறது மோடி அரசு என்று ராகுல் காந்தி ட்வீட்.

12:36 (IST)21 Aug 2019

கேவியட் மனுவை தாக்கல் செய்த சி.பி.ஐ

ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ்  வழக்கில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்காக காத்திருக்கும் நிலையில், சி.பி.ஐ. தரப்பு நியாயங்களை கேட்காமல், உச்ச நீதிமன்றம் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்று கேவியட் மனுவை தாக்கல் செய்திருக்கிறது இந்திய புலனாய்வு துறை.  

12:20 (IST)21 Aug 2019

சிதம்பரத்திற்கு துணை நிற்கும் காங்கிரஸ்

உண்மை பேசும் பொதுமக்களை ஒரு அரசு துன்புறுத்துகிறது. இந்நடவடிக்கை அரசின் கோழைத்தனத்தை தான் காட்டுகிறது. என்ன ஆனாலும் சிதம்பரத்துடன் துணை நிற்போம் என்று காங்கிரஸ் கட்சியின் அதிகார ட்விட்டர் பக்கத்தில் இருந்து கருத்து.

12:17 (IST)21 Aug 2019

ப.சிதம்பரமும், அவரின் குடும்பத்தினரும் ஊழலில் திளைத்தவர்கள் – எச்.ராஜா

இனிமேல் அவரை யாராலும் காப்பாற்ற இயலாது என்றும் அவருக்கு ஏற்கனவே நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்டதாகவும் எச்.ராஜா அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ப்ரியங்கா காந்தியின் ட்வீட்டை ரீட்வீட் செய்து, தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

11:48 (IST)21 Aug 2019

சிதம்பரத்தின் வீட்டை முற்றுகையிட்ட சிபிஐ

ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மற்றும் இடைக்கால கைது தடை கோரிய இரண்டு மனுக்களையும் நேற்று  டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்த  நிலையில் கடந்த 18 மணி நேரங்களில் 4 முறை ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு சென்றுள்ளனர் சி.பி.ஐ அதிகாரிகள். 

11:34 (IST)21 Aug 2019

ED issues lookout notice against Congress leader P Chidambaram

தலைமை நீதிபதி அமர்வு  ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரணை செய்ய மறுத்துவிட்ட நிலையில்  வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லாமல் இருக்க விமான நிலையங்கள் முழுவதும் சிதம்பரத்திற்கு எதிராக லுக் – அவுட் நோட்டீஸ் பிறப்பித்த அமலாக்கத்துறை. 

11:30 (IST)21 Aug 2019

வேறொரு அமர்வுக்கு மேல்முறையீட்டு மனு மாற்றப்படலாம்

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, ப.சிதம்பரத்தின் மனுவை விசாரிக்க நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு பரிந்துரை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

11:22 (IST)21 Aug 2019

ப. சிதம்பரத்தின் மனுவை அவசர வழக்காக விசாரணை செய்ய தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு

ரஞ்சன் கோகாய் தலைமையிலான தலைமை நீதிபதிகள் அமர்வு, அயோத்தி ராமர் கோவில் வழக்கில் தொடர் விசாரணைகள் மேற்கொண்டு வருவதால் சிதம்பரத்தின் வழக்கை அவசர வழக்காக விசாரணை செய்ய தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.

11:17 (IST)21 Aug 2019

இந்த வழக்கில் தலைமை நீதிபதி தான் முடிவெடுப்பார் – நீதிபதி ரமணா

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி என்.வி. ரமணா முன்னிலையில் நடைபெற்று வருகிறது. ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீதான முடிவினை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவிப்பார் என்று என்.வி. ரமணா அறிவித்துள்ளார்.

11:13 (IST)21 Aug 2019

கபில் சிபில் வாதம்

ப.சிதம்பரத்தின் மேல் முறையீட்டு மனுவின் மீதான விசாரணை தற்போது துவங்கியுள்ளது. மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் சிதம்பரம் சார்பில் ஆஜராகி பேசி வருகிறார்.  நேற்று இரவு கூட ப.சிதம்பரத்தை கைது செய்ய சி.பி.ஐ. மற்றும் அமலாக்கதுறையினர் முயற்சி செய்தனர் என கபில் சிபில் வாதம் செய்தார்.

11:02 (IST)21 Aug 2019

சிதம்பரத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த ப்ரியங்கா காந்தி

ப.சிதம்பரம் பெயில் நிராகரிப்பு குறித்து ட்வீட் செய்துள்ள பிரியங்கா காந்தி, நாட்டின் வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்த மரியாதைக்குரிய ராஜ்யசபை உறுப்பினர் இந்நாட்டின் நிதி அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். பாஜகவின் குற்றங்களை சுட்டிக்காட்டுவதால் இது போன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

INX Case : இந்த வழக்கில் இதுவரை நடைபெற்றது என்ன?

மே 15, 2017ம் ஆண்டு சி.பி.ஐ அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் (Foreign Investment Promotion Board – FIPB) கீழ் ஐ.என்.எக்ஸ் நிறுவனத்திற்கு அந்நிய முதலீட்டினை பெற தரப்பட்ட ஒப்புதலில் ஊழல் நடைபெற்றிருப்பதாக முதன்மை தகவல் அறிக்கையை பதிவு செய்தது.  2018ம் ஆண்டு அமலாக்கத்துறை, ப.சிதம்பரம் மீது மோசடி வழக்கினை பதிவு செய்தது.

இந்த விவகாரத்தில், சிதம்பரத்திற்கு துணை புரிந்த அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்பு டெல்லி உயர் நீதிமன்றம் அவரை பிணையில் வெளியிட்டது. கடந்த ஆண்டு மே மாதம் 31ம் தேதி, கைது செய்ய இடைக்கால தடையை கோரி நீதிமன்றத்தை நாடினார் ப.சிதம்பரம்.

இந்த வருடம் ஜூலை 4ம் தேதி, ஐ.என்.எக்ஸ். நிறுவனத்தின் முன்னாள் நிறுவனர் இந்திராணி முகர்ஜி அப்ரூர்வராக மாறினார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: P chidambaram bail live updates inx case cbi probe former finance minister approaches supreme court today

Next Story
ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் உண்மையான தாக்குதல் இலக்கு சமூகநீதிதான் – பிரியங்கா காந்தி விமர்சனம்priyanka gandhi vadra, mohan bhagwat, reservation, mohan bhagwat reservation, rss reservation, பிரியங்கா காந்தி விமர்சனம், ஆர்.எஸ்.எஸ் - பாஜகவின் தாக்குதல் இலக்கு சமூகநீதி, மோகன் பகவத், ராம்விலாஸ் பாஸ்வான் congress, reservation debate, uttar pradesh news, tamil indian express
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com