New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/09/P-Chidambaram.jpg)
chennai lockdown corona
chennai lockdown corona
கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெற்ற வெற்றி விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி பெறும் டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் போல் உள்ளது என முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகம் மாநிலத்தில் நாடாளுமன்றத்தில் காலியாக உள்ள மண்டியா, பல்லாரி, சிவமொக்கா ஆகிய 3 தொகுதிகளுக்கும், சட்டமன்றத்தில் காலியாக இருக்கும் ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கும் கடந்த 3-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடந்தது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் - மஜத கூட்டணி கட்சி 4 -1 என்ற கணக்கில் வென்றது.
November 2018கர்நாடக இடைத் தேர்தல்களில் 4-1 என்ற வெற்றி விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி பெறும் டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் போல் உள்ளது. இதில் கற்க வேண்டிய பாடம்: கூட்டணி பலன் தந்துள்ளது
— P. Chidambaram (@PChidambaram_IN)
கர்நாடக இடைத் தேர்தல்களில் 4-1 என்ற வெற்றி விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி பெறும் டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் போல் உள்ளது. இதில் கற்க வேண்டிய பாடம்: கூட்டணி பலன் தந்துள்ளது
— P. Chidambaram (@PChidambaram_IN) November 6, 2018
இதுகுறித்து முன்னாள் நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "கர்நாடக இடைத் தேர்தல்களில் 4-1 என்ற வெற்றி விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி பெறும் டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் போல் உள்ளது. இதில் கற்க வேண்டிய பாடம்: கூட்டணி பலன் தந்துள்ளது" என பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.