நிதியமைச்சரின் அறிவிப்பில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதுவுமில்லை; ப.சிதம்பரம் விமர்சனம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி கூறியபடி, பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடிக்கான தன்னிறைவு திட்டங்களை அறிவித்த நிலையில், நிதியமைசரின் அறிவிப்பில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பலன் எதுவுமில்லை என்று காங்கிரச் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி கூறியபடி, பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடிக்கான தன்னிறைவு திட்டங்களை அறிவித்த நிலையில், நிதியமைசரின் அறிவிப்பில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பலன் எதுவுமில்லை என்று காங்கிரச் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
Advertisment
முன்னால் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது: “பிரதமர் மோடி நேற்று மாலை முடங்கிய பொருளாதாரத்தை மீண்டும் தொடங்க ரூ.20 லட்சம் கோடி என்ற அளவில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தொகுப்பை அறிவித்தார். எதிர்பார்த்தபடி, அநேகமாக அரசு நினைத்தபடி அது தலைப்புச் செய்தியானது. இருப்பினும், உள்ளடக்கப் பக்கம் காலியாக இருந்தது.
இன்று முதல் நிதி தூண்டுதல் தொகுப்பு விவரங்கள் அடுத்த சில நாட்களில் நிதியமைச்சரால் அறிவிக்கப்படும் என்று நமக்கு உறுதியளிக்கப்பட்டது. ஆகவே இன்று மாலை 4 மணிக்கு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தான் நிதியமைச்சரின் உரையைக் கவனித்தேன்.
நிதியமைச்சர் நமக்கு என்ன சொன்னார்?
ரூ.3 லட்சம் கோடி கடன் உத்தரவாத நிதியத்தின் ஆதரவுடன் 45 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில்துறையினருக்கு இணை இலவச கடன் திட்டம் வழங்கப்படும்.
ரூ.20,000 கோடி துணைக் கடன் மற்றும் ரூ.10,000 கோடி ஈக்விட்டி ஃபண்ட் உள்ளிட்ட சில நடவடிக்கைகள் இருக்கும். அரசு இபிஎஃப் பங்களிப்புகளுக்காக ரூ.2,500 கோடி ஒதுக்கியது பணப்புழக்கத்திற்கு உதவும்.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனங்கள், சிறு நிதி நிறுவனங்கள் ஆகிவற்றின் கடன் கருவிகளில் (ரூ.30,000 கோடி) முதலீடு செய்யும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களுக்கு அரசாங்கம் கடன் உத்தரவாதம் அளிக்கும்;
உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் டிஸ்காம்களுக்கு பணப்புழக்கம் வழங்கப்படும்;
அரசாங்க ஒப்பந்தங்களுக்கு 6 மாதங்கள் காலம் நீட்டிக்கப்படும்;
டி.டி.எஸ் விகிதம் 31-3-2021 வரைக்கும் (ரூ .50,000 கோடி) வரை குறைக்கப்படும் மற்றும் அனைவருக்கும் வரி திருப்பிச் செலுத்துதல் துரிதப்படுத்தப்படும். இவை பணப்புழக்கம் தொடர்பான மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் ஆகும்.
எனது கருத்துகளை சுருக்கமாகவும் கவனமாகவும் கூற விரும்புகிறேன்.
லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கும் பசி மற்றும் பேரழிவிற்குள்ளான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் நிதியமைச்சர் இன்று கூறியதில் எதுவும் இல்லை என்பதை நான் முதலில் சுட்டிக்காட்டுகிறேன். பல ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இன்னும் நடந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புகிறார்கள். ஒவ்வொரு நாளும் உழைப்பவர்களுக்கு இது ஒரு கொடூரமான அடியாகும்.
வறுமையில் தள்ளப்பட்ட மக்கள் தொகையில் பாதிக்கும் கீழ் 13 கோடி குடும்பங்களுக்கு பணப் பரிமாற்றத்தின் மூலம் பலன் எதுவும் இல்லை. நேற்று, பேராசிரியர் தாமஸ் பிக்கெட்டி மட்டும் அவர்களுக்கு பணத்தை வழங்க கெஞ்சினார்.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"