p chidambaram speech : மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், பாடல் பாடி கரணட் பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை புகழ்ந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
கடந்த வாரம், இந்தியாவின் முதலாவது பெண் நிதியமைச்சராக பொறுப்பெற்ற நிர்மலா சீதாராமன் தனது முதல் பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நிர்மலா தனது முதல் பட்ஜெட்டை வெற்றிக்கரமாக தாக்கல் செய்தார்.இந்திராகாந்திக்கு பிறகு நிதியமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் முதல் பெண் நிதியமைச்சர என்ற சிறப்பு பெயருக்கு சொந்தக்காரர் நிர்மலா சீதாராமன்.
இந்நிலையில், இன்று மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைப்பெற்றன. அப்போது பேசிய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் ” இன்று இந்திய அணி கிரிக்கெட்டில் தோற்று போனதற்கு மட்டும் வருத்தம் கொள்ளவில்லை. நம் நாட்டின் ஜனநாயகமும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. கர்நாடகா, கோவா மாநிலங்களில் நிலவும் அரசியல் குழப்பங்களைக் காண்கிறோம்.
இது பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தர ஏஜென்சிகள், சர்வதேச அமைப்புகள் இந்தியாவில் நிலவும் அரசியல் நிலையற்ற தன்மையால், பொருளாதார விஷயங்களில் பின்வாங்கத் தொடங்குவர்” என்றார்.
அவரின் உரையில் இறுதியாக முதல் பெண் நிதியமைச்சராக பொறுப்பேற்று நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தாக்கல் செய்ததில் பெருமை அடைவதாக கூறினார். அதனைத் தொடர்ந்து,
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி.. என்ற பாரதியாரின் பாடலை " பாடினார்.
அப்போது மாநிலங்களவையில் எதிர் திசையில் அமர்ந்திருந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புன்னகையிட்டார்.