106 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்தார் ப.சிதம்பரம்; ஒரு குற்றச்சாட்டு கூட என் மீது சுமத்தப்படவில்லை என பேட்டி

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, டெல்லி திகார் சிறையிலிருந்து புதன்கிழமை...

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, டெல்லி திகார் சிறையிலிருந்து புதன்கிழமை விடிவிக்கப்பட்டார். 106 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு வெளியே வந்த காங்கிரஸ் தலைவர், ப.சிதம்பரம், இந்த காலகட்டத்தில் எனக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டு கூட முன்வைக்கப்படவில்லை என்று கூறினார்.

ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியமான எஃப்.ஐ.பி.பி-க்கு அனுமதி வழங்குவதில் முறைகேடுகள் தொடர்பாக 74 வயதான மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் மத்திய புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டார். இன்று அவர் சிறையிலிருந்து வெளியே வந்தபோது ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் அவர்களை வரவேற்றனர்.

சிறைக்கு வெளியே காத்திருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், தனது தந்தை வீடு திரும்பத் தயாராக இருப்பதால் தான் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார். “இது ஒரு நீண்ட காத்திருப்பு. அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது எல்லாவற்றையும் ஆதரித்த சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட மொத்த காங்கிரஸ் தலைவர்களுக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று கூறினார்.

இன்று காலை, உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு, ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ஒதுக்கி வைத்துவிட்டு அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதுவதாக ஒப்புக்கொண்டுள்ளது.  இருப்பினும், காங்கிரஸின் மூத்த தலைவர், ஐ.என்.எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கில் எந்தவொரு பத்திரிகை நேர்காணல்கள் அளிப்பதையோ அல்லது அவர் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவிப்பதையோ உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

2007 ஆம் ஆண்டில் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு எஃப்.ஐ.பி.பி அனுமதி வழங்குவதில் முறைகேடுகள் நடந்ததாக சிபிஐ விசாரித்து வரும் நிலையில், பணமோசடி குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ப.சிதம்பரம் சிபிஐயால் கைது செய்யப்பட்டு ஆகஸ்ட் 21 முதல் காவலில் வைக்கப்பட்டார். அவரை அக்டோபர் 16 ம் தேதி பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையும் கைது செய்தது.

ஆறு நாட்களுக்குப் பிறகு, அக்டோபர் 22 ஆம் தேதி, சிபிஐ தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த காலத்தில் 2007 ஆம் ஆண்டில் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றதற்காக ஐ.என்.எக்ஸ் மீடியா குழுமத்திற்கு வழங்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் (எஃப்.ஐ.பி.பி) அனுமதியில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டிய சிபிஐ மே 15, 2017 அன்று வழக்குப் பதிவு செய்தது. அதன்பிறகு அமலாக்கத்துறை ஒரு நிதி மோசடி வழக்கை பதிவு செய்தது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close