77 வயதாகும் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் ஓய்வு பெற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்துள்ளார்.
இந்த நிலையில், “73 வயது ஏழு மாதங்களான பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாகச் சொல்கிறாரா? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், உள்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மே 25-ம் தேதி ஒடிசாவில் ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களின் மூன்றாவது கட்டத்திற்கு முன்னதாக, ஒடிசாவில் தேர்தல் பரப்புரையில் அமித் ஷா கலந்துகொண்டார்.
அப்போது, பாரதிய ஜனதா கட்சி மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால், ஒடியா மொழி பேசும் இளைஞரான 'பூமிபுத்ரா'வை முதல்வராக மாற்றுவோம் என்று உறுதியளித்தார்.
இதையும் படிங்க : 'ஒடிசா ரத்ன பெட்டக சாவி தமிழ்நாடு கையில்'- வி.கே. பாண்டியனை தாக்கிய மோடி!
தொடர்ந்து, ”நவீன் பாபுவுக்கு உடல்நிலை சரியில்லை, இதன் விளைவாக 1.5 லட்சம் அரசு காலியிடங்கள் காலியாக உள்ளன. நிரப்பப்படுவதில்லை. நாங்கள் அரசாங்கத்தை அமைத்தால், இந்தப் பதவிகளுக்கான நியமனங்களைச் செய்வோம்” என்றார்.
உள்துறை அமைச்சரின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் எக்ஸ் சமூக வலைதளத்தில், “நவீன் பட்நாயக் வயது முதிர்ந்ததால் (77 வயது) ஓய்வு பெற வேண்டும் என்று திரு அமித் ஷா கூறியபோது, அவர் திரு நரேந்திர மோடிக்கு (73) ஒரு குறிப்பைக் கொடுத்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதே குற்றச்சாட்டை டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் சுமத்தியுள்ளார். மோடி 75 வயதில் ஒய்வு பெற்ற உடன் அமித் ஷா எதிர்க்கட்சித் தலைவராக தொடர்வார் என இவர்கள் கூறினார். இந்த நிலையில், ப. சிதம்பரமும் அதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
மோடி ஓய்வு பெற மறைமுக அறிவுரையா? அமித் ஷாவுக்கு ப.சிதம்பரம் கேள்வி
77 வயதாகும் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் ஓய்வு பெற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை பரிந்துரைத்துள்ளார்.
Follow Us

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.