P.Chidambaram Latest News: டெல்லி திகார் சிறையில் ராகுல், பிரியங்கா ஆகியோர் ப.சிதம்பரத்தை சந்தித்து பேசினர். ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகி 3 மாதங்களைக் கடந்து சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஆகஸ்ட் 21-ம் தேதி சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார். அக்டோபர் 22-ம் தேதி அந்த வழக்கில் அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. எனினும் இதே வழக்கு தொடர்பான பணப் பரிமாற்ற வழக்கில் அக்டோபர் 16-ம் தேதி அமலாக்கத்துறையும் கைது செய்த காரணத்தால், சிறைவாசத்தை தொடருகிறார் ப.சிதம்பரம்.
ப.சிதம்பரத்தை இன்று (புதன்கிழமை) காலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் திகார் சிறையில் சந்தித்தனர். சுமார் 50 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது.
இந்த சந்திப்பின் போது சிவகங்கை எம்.பி.யும் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தியும் உடன் இருந்தார். இந்த சந்திப்பு குறித்து கார்த்தி ப.சிதம்பரம் கூறுகையில், ‘இன்று ராகுலும், பிரியங்காவும் எனது தந்தையை சந்தித்தனர். காங்கிரஸ் கட்சி எனது தந்தையும் இருக்கிறது என்கிற வலுவான செய்தியை இது வெளி உலகுக்கு சொல்கிறது.’ என்றார் கார்த்தி. ப.சிதம்பரம் 99 நாட்களாக சிறையில் இருப்பதாகவும் கார்த்தி குறிப்பிட்டார்.
Shri @RahulGandhi and Smt @priyankagandhi meeting my father shows a strong signal that the party stands with us: Karti P Chidambaram @KartiPC.@INCIndia @INCTamilNadu @SupriyaShrinate @s_palani @VijayRamdoss_ @vijay_jayamohan @Gauthamjsarathy @K_T_L pic.twitter.com/sz2D5rAYcu
— Manoj Vadakadu (@Manoj_IYC) November 27, 2019
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசிதரூர் திகாரில் ப.சிதம்பரத்தை சந்தித்து, இரு நாட்கள் கடந்த நிலையில் ராகுல்-பிரியங்கா ஆகியோரும் நேரில் வந்து சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சோனியா, மன்மோகன் சிங் ஆகியோரும் சந்தித்தார்கள்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:P chidambaram tihar jail rahul gandhi priyanka gandhi meeting
ஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன?
சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை
கடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
இணையத்தில் வைரலாகும் ”குக் வித் கோமாளி” சிவாங்கி, புகழ் வீடியோ
முதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்