Padma Shri Awards 2020: ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
21 people have been conferred with Padma Shri Awards 2020 including Jagdish Jal Ahuja, Mohammed Sharif, Tulasi Gowda and Munna Master. #RepublicDay pic.twitter.com/7blGTjxe9q
— ANI (@ANI) January 25, 2020
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட 12 பேருக்கு தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை (ஜன.26) நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கௌரவிக்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.
நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் 71 குடியரசு தினத்துக்கு முந்தைய தினமான இன்று சனிக்கிழமை (ஜனவரி 25) அறிவிக்கப்பட்டன. அறிவிக்கப்பட்டன. ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக சேவை, ஆன்மிகம், கலை, மருத்துவம், இலக்கியம், பொறியியல், கல்வி, விளையாட்டு, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருதுகள் அளிக்கப்படுகின்றன.
Padma Shri Awardees 2020
இதில், தமிழகத்தைச் சேர்ந்த அமர்சேவா சங்கத்தின் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தை சேர்ந்த லலிதா, சரோஜா சிதம்பரம், மனோகர் தேவதாஸ் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக தொழிலதிபர் வேணு சீனிவாசனுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் புதுச்சேரியில் சேர்ந்த மனோஜ் தாஸ்க்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
#PadmaAwards Divyang Social Worker S Ramakrishnan to be awarded with Padmashri pic.twitter.com/zuhPbSAJBQ
— Puthiya Thalaimurai (@PTTVEnglish) January 25, 2020
அதேபோல் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சமூக சேவகர் ஜெகதீஷ் லால் அவுஜாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக சேவகர் முகமது செரீஃப்க்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முகமது செரீஃப் உறவினர்கள் இல்லாத 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சடலங்களுக்கு இறுதி சடங்குகளை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தவிர,
விளையாட்டுப் பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு பத்ம விபூஷண்
விளையாட்டுப் பிரிவில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பத்ம பூஷன்
மறைந்த அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ், ஜார்ஜ் பெர்னான்ட்ஸ் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண்
கலைப்பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கலீ ஷபி மஹபூப், ஷேக் மஹபூப் சுபானிக்கு பத்மஸ்ரீ
தமிழகத்தில் அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் சிறந்து விளங்கிய பிரதீப்புக்கு பத்மஸ்ரீ
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், இயக்குநர் கரண் ஜோஹர், தயாரிப்பாளர் ஏக்தா கபூருக்கு பத்மஸ்ரீ
தமிழகத்தை சேர்ந்த லலிதா, சரோஜா சிதம்பரம், மனோகர் தேவதாஸ் ஆகியோருக்கு பத்மஸ்ரீ
இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் புதுச்சேரியில் சேர்ந்த மனோஜ் தாஸ்க்கு பத்ம பூஷன்
மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு பத்ம பூஷன்
என மொத்தம் 118 பேருக்கு பத்மஸ்ரீ, 7 பேருக்கு பத்ம விபூஷ்ண், 16 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.