/indian-express-tamil/media/media_files/2025/04/29/PspKkCM9WpTmWpmis5Mj.jpg)
இன்று நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு எதிராக பதிலடி கொடுப்பதற்கான முழு சுதந்திரத்தை ஆயுதப் படைகளுக்கு பிரதமர் மோடி வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான பஹல்காம் பகுதியில் உள்ள பைசரனில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடும் முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Pahalgam Terror Attack Live Updates: ‘Armed forces have complete operational freedom to decide response,’ says PM Modi at security meet
இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. பிரதமர் இல்லத்தில் சுமார் 90 நிமிடங்கள் நடந்த இக்கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர் (சி.டி.எஸ்) ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி மற்றும் இந்திய விமானப்படைத் தலைவர் விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு எதிராக பதிலடி கொடுப்பதற்கான முழு சுதந்திரத்தை பிரதமர் மோடி வழங்கி இருக்கிறார். இந்தியா எப்படி பதிலடி கொடுக்கலாம், இலக்குகள் மற்றும் அதற்கான நேரத்தைத் தீர்மானிக்க ஆயுதப் படைகளுக்கு முழுமையான செயல்பாட்டு சுதந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி இருப்பதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.