குழந்தைகளை அரவணைத்து உயிரைக் காப்பாற்றிய பஹல்காம் கைடு: சத்தீஸ்கர் பா.ஜ.க நிர்வாகிக்கு 'கார்டியன் ஏஞ்சல்' ஆக எப்படி?

என் நான்கு வயது மகளும் மனைவியும் என்னிடமிருந்து சற்று தொலைவில் இருந்தனர், திடீரென துப்பாக்கிச் சூடு தொடங்கியது.

என் நான்கு வயது மகளும் மனைவியும் என்னிடமிருந்து சற்று தொலைவில் இருந்தனர், திடீரென துப்பாக்கிச் சூடு தொடங்கியது.

author-image
WebDesk
New Update
Pahalgam guide guardian angel

Pahalgam guide became guardian angel for Chhattisgarh BJP worker: ‘Hugged the children, saved their lives’

தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலின் போது, சத்தீஸ்கர் பாஜக இளைஞர் பிரிவு ஊழியர் அரவிந்த் அகர்வாலின் குடும்பத்தை உள்ளூர் வழிகாட்டி நசகத் அகமது ஷா காப்பாற்றியுள்ளார்.

Advertisment

இருப்பினும், இந்த தாக்குதலில் நஸாகத்தின் உறவினர் உயிரிழந்தார். 25 சுற்றுலா பயணிகள் மற்றும் குதிரையில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற உள்ளூர் நபர் என மொத்தம் 26 பேர் கொல்லப்பட்டனர். குதிரை ஓட்டிய நஸாகத்தின் உறவினர் சையத் ஆதில் ஹுசைன் ஷா (30), தீவிரவாதிகளைத் தடுக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடந்தபோது, அகர்வால் (35) மற்ற சுற்றுலாப் பயணிகள் தன்னை பாதுகாப்பாக இழுத்துச் சென்றதாகவும், ஆனால் அவரது மனைவி பூஜா மற்றும் அவர்களது நான்கு வயது மகள் சற்று தொலைவில் இருந்ததாகவும் கூறினார்.

"எல்லாம் அமைதியாக இருந்தது, நான் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தேன். என் நான்கு வயது மகளும் மனைவியும் என்னிடமிருந்து சற்று தொலைவில் இருந்தனர், திடீரென துப்பாக்கிச் சூடு தொடங்கியது. எனது வழிகாட்டி நசகத் (28) அவர்களுடன் மற்றொரு தம்பதியினர் மற்றும் அவர்களின் குழந்தையுடன் இருந்தார்" என்று சிருமிர்ரி நகரத்தைச் சேர்ந்த அகர்வால் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு தெரிவித்தார்.

Advertisment
Advertisements

துப்பாக்கிச் சூடு தொடங்கியபோது, நசகத் அனைவரையும் படுத்துக் கொள்ளச் சொன்னார், என் மகளையும் என் நண்பரின் மகனையும் கட்டிப்பிடித்து அவர்களின் உயிரைக் காப்பாற்றினார். பின்னர் அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். அடுத்து என் மனைவியை மீட்க மீண்டும் சென்றார்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எனது குடும்பம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. பின்னர் மருத்துவமனையில் தான் தனது மனைவியையும் மகளையும் பார்த்தார், என்று அவர் நினைவு கூர்ந்தார்
"நசகத் மட்டும் அங்கு இல்லையென்றால் என்ன நடந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. என் மனைவியின் ஆடைகள் கிழிந்திருந்தன, ஆனால் உள்ளூர் மக்கள் அவருக்கு அணிய ஆடைகள் கொடுத்தனர்," என்று அகர்வால் கூறினார்.

இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த நசகத், "நாங்கள் நின்ற இடத்திலிருந்து சுமார் 20 மீட்டர் தொலைவில் ஜிப்லைன் அருகே துப்பாக்கிச் சூடு நடந்தது. முதலில் என்னைச் சுற்றியிருந்த அனைவரையும் தரையில் படுத்துக் கொள்ளச் சொன்னேன். பின்னர் வேலியில் ஒரு இடைவெளியைக் கண்டுபிடித்து குழந்தைகளை அதன் வழியாக அழைத்துச் சென்றேன். தீவிரவாதிகள் எங்களை நெருங்குவதற்கு முன்பு நாங்கள் அந்த இடத்திலிருந்து தப்பித்தோம்," என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையிடம் கூறினார்.

அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்ற பிறகு, "அகர்வால் ஜியின் மனைவியை கண்டுபிடிக்கத் திரும்பினேன், அவர் வேறு திசையில் ஓடியிருந்தார். சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் அவளைக் கண்டுபிடித்து என் காரில் அழைத்து வந்தேன். அவர்களை பாதுகாப்பாக ஸ்ரீநகருக்கு அழைத்துச் சென்றேன்", என்று அவர் கூறினார்.

அப்போதுதான் அவருக்கு ஒரு சோகமான செய்தி தொலைபேசியில் வந்தது. "என் (உறவினர்) சகோதரன் ஆதில், குதிரை சவாரி செய்பவர், தாக்குதலில் இறந்துவிட்டார் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது."

இந்த தாக்குதலைக் கண்டித்த நசகத், "சுற்றுலாதான் எங்கள் வாழ்வாதாரம். அது இல்லாமல் நாங்கள் வேலையில்லாமல் இருக்கிறோம், எங்கள் குழந்தைகளின் கல்வி இதையே சார்ந்துள்ளது... இந்த பயங்கரவாத தாக்குதல் எங்கள் இதயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போன்றது. நாங்கள் எங்கள் கடைகள் மற்றும் வணிகங்களை மூடி போராட்டம் நடத்துகிறோம். நாங்கள் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றவர்கள், சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று நம்புகிறேன். பாதுகாப்புப் படையினர் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்" என்றார்.

Read in English: Pahalgam guide became guardian angel for Chhattisgarh BJP worker: ‘Hugged the children, saved their lives’

Jammu Kashmir

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: