ராகுல் திருப்பதி
Pak F-16 : பாகிஸ்தானின் F-16 போர் விமானம் சுட்டவீழ்த்தியதற்கு ஆதாரமாக இந்திய விமானப்படை 2 ரேடார் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் F-16 போர்விமானத்தை இந்தியா சுட்டுவீழ்த்தியது தொடர்பாக சர்வதேச ஊடகங்கங்கள் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்ததது. இந்த கேள்விக்கு இப்போது இந்திய விமானப்படை ஆதாரத்துடன் பதில் அளித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டுக்கு சொந்தமான எஃப்-16 விமானம் தகர்க்கப்பட்டது உண்மைதான் என இந்திய விமானப்படை துணை மார்ஷர் ஆர்.ஜி.கே.கபூர் விளக்கம் அளித்துள்ளார். இதுக் குறித்து அவர் நேற்று பாதுகாப்பு அமைச்சகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது, “ பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற்ற சண்டையில் பாகிஸ்தான் விமானப் படை F-16 விமானத்தை பயன்படுத்தியதற்கும் அதனை இந்திய விமானப் படை MIG 21 Bison மூலம் சுட்டுவீழ்த்தியதற்கும் வலுவான ஆதாரம் உள்ளது.
"இரண்டு விமானங்கள் வான்வெளியில் சண்டையிட்டன என்பதில் சந்தேகத்துக்கே இடமில்லை. அவற்றில் ஒன்று இந்திய விமானப் படையின் பிஸ்டன் மற்றொன்று பாகிஸ்தான் விமானப் படையின் F-16. பாகிஸ்தான் விமானப் படையின் எலெக்ட்ரானிங் சிக்னேச்சர் (electronic signature) மற்றும் ரேடியோ டிரான்ஸ்கிரிப்ட்ஸ் (radio transcripts) மூலம் இது தெளிவாக தெரிகிறது."
சுட்டுவீழ்த்தப்பட்ட விமானம் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்தது. எனவே F-16 ரக விமானம் ஒன்றை பாகிஸ்தான் இழந்ததற்கு எங்களிடம் ரேடார் புகைப்படத்துடன் கூடிய ஆதாரம் உள்ளது. ” என்று கூறினார்.
கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் கடந்த கடந்த 26ம் தேதி தாக்குதல் நடத்தின.
இதை சற்றும் எதிர்பார்க்காத பாகிஸ்தான், காஷ்மீரில் குண்டு வீச போர் விமானங்கள் அனுப்பியது. இவற்றை இந்திய விமானப்படை விமானங்கள் விரட்டியடித்தன. இந்த சண்டையில் பாகிஸ்தான், அமெரிக்கா வழங்கிய எஃப்-16 போர் விமானங்களை பயன்படுத்தியதாக இந்திய விமானப்படை கூறியது. அதற்கு ஆதாரமாக எஃப்-16 போர் விமானத்தில் பயன்படுத்தப்படும் அம்ராம் ஏவுகணையின் பாகங்களையும் இந்திய விமானப்படை ஆதாரமாக காட்டியது.
ஒரு எஃப்-16 ரக போர் விமானத்தை விமானி அபினந்தன் சுட்டு வீழத்தினார் எனவும் இந்திய விமானப்படை கூறியது. ஆனால், எஃப்-16 போர் விமானங்களை பயன்படுத்தவே இல்லை என்றும், எஃப்-16 ரக விமானங்கள் எதுவும் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்றும் பாகிஸ்தான் மறுத்தது.
எஃப்-16 ரக போர் விமானங்களை கணக்கெடுக்க வரும்படி அமெரிக்காவுக்கு, பாகிஸ்தான் சமீபத்தில் அழைப்பு விடுத்ததாகவும், இந்த சோதனையில் அமெரிக்கா வழங்கிய அனைத்து எஃப்-16 போர் விமானங்களையும் பாகிஸ்தான் காட்டியதாகவும் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், கடந்த பிப்ரவரி 27ம் தேதி, பாகிஸ்தானின் எஃப்-16 விமானத்தை இந்திய விமானப்படையின் மிக்-21 பைசன் ரக விமானம், நவுசேரா பகுதியில் சுட்டு வீழ்த்தியது என இந்திய விமானப்படை தெரிவித்திருந்தது. இதுத்தொடர்பான தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், இபோது 2 ரேடார் புகைப்படங்களை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.