ஆப்கானுக்கு 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை: பாகிஸ்தான் பதிலுக்காக காத்திருக்கும் இந்தியா

ஆப்கானிஸ்தானுக்கு 50,000 மெட்ரிக் டன் கோதுமை ஏற்றிச் செல்லும் டிரக்குகளை அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு இந்திய அரசு கோரிக்கை வைத்ததுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு தரைவழியாக உணவு தானியங்களை எடுத்து செல்ல அனுமதிக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை வைத்துள்ளது.

தற்போது வரை, இந்தியாவின் கோரிக்கைக்கு,பாகிஸ்தான் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை. விரைவில், அதற்கான அனுமதி கிடைக்கும் என இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.

தாலிபான் ஆட்சிக்கு உதவுவது மூலம் பல்வேறு விளைவுகளைச் சந்திக்க நேரிடும் சர்வதேச சமூகம் எச்சரித்திருந்தாலும், இந்தியா மனிதாபிமான அடிப்படையில் ஆப்கானிஸ்தானுக்கு உதவ முன் வந்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு 50,000 மெட்ரிக் டன் கோதுமை ஏற்றிச் செல்லும் டிரக்குகளை அனுமதிக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு இந்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.

தற்போது, குளிர்காலம் மற்றும் நிதி நெருக்கடியால் சிக்கித்தவிக்கும் ஆப்கானில், உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சீனா, துருக்கி போன்ற சில நாடுகள் கடந்த சில வாரங்களாக ஆப்கானியர்களுக்கு உணவு விநியோகம் செய்யத் தொடங்கியுள்ளன.

ஆப்கானிஸ்தான் மக்களிடையே நல்லுறவைக் கொண்ட இந்தியாவும் தனது பங்கிற்கு உதவிகளைச் செய்ய விரும்பம் தெரிவிக்கிறது. ஆனால், விமானம் மூலம் பெரிய அளவில் உணவு தானியங்களைக் கொண்டு செல்வது கடினம் என்பதால், தரைவழி போக்குவரத்தை இந்தியா முடிவுசெய்துள்ளது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, 50,000 மெட்ரிக் டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்லும் பணிக்கு பாகிஸ்தான் வழியாக 5,000 டிரக்குகளை அனுப்ப வேண்டும்” என்கின்றனர்.

அதிகளவில் டிரக்கள் மற்றும் சாலைகளை உபயோகிக்க இந்தியாவுக்குப் பாகிஸ்தான் அனுமதியளிக்குமா என்பது கேள்வியாக உள்ளது.

இந்திய வாகனங்களுக்குப் பாகிஸ்தான் அனுமதியளிக்க வேண்டும் அல்லது வாகா-அட்டாரி எல்லையில் உள்ள ஜீரோ பாயிண்டில் கோதுமையை இறக்கி மீண்டும் பாகிஸ்தான் லாரிகளில் ஏற்ற வேண்டும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது சிக்கலான முடிவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமானம் அடிப்படையில் உதவு இந்தியா தயாராக உள்ளது. ஆனால், ஆப்கானுக்கு இந்தியா உதவ பாகிஸ்தான் தயாராக உள்ளதா என்பது தான் தற்போது கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம். அதே போல, இந்தியாவின் உதவியை ஏற்க தாலிபான் விருப்பம் தெரிவித்துள்ளதா என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மாஸ்கோ மற்றும் தோஹாவில் தாலிபான்களை இந்திய அதிகாரிகளைச் சந்தித்தபோது, அவர்கள் உதவியைப் பெற விருப்பம் தெரிவித்ததாகவே கூறப்படுகிறது. இருப்பினும், இரு நாடுகள் இடையே பாகிஸ்தான் சவாலாக உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pak sits on india request to let trucks take its wheat to afghanistan

Next Story
பரபரப்பு திருப்பம்; ஒத்துக் கொண்ட டிடிவி தினகரன்….அடுத்து என்ன?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com