“பாகிஸ்தான் ஜிந்தாபாத் ஹிந்துஸ்தான் முர்தாபாத்” என்று கோஷமிட்ட நபருக்கு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் நூதன நிபந்தனை உடன் கடந்த செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது.
ஃபைசன் என்பவர் இவ்வாறு கோஷம் எழுப்பியுள்ளார். இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம். “பாகிஸ்தான் ஜிந்தாபாத் ஹிந்துஸ்தான் முர்தாபாத்” என்று கோஷம் எழுப்பிய அவர், மாதத்தில் 2 முறை மூவர்ண தேசியக் கொடி ஏற்றி 21 முறை வணக்கம் செலுத்தி ‘பாரத் மாதா கி ஜெய்’ எனச் சொல்ல வேண்டும் என உத்தரவிட்டு ஃபைசனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்த ஆண்டு மே 17 அன்று பைசான் மீது வழக்குப் பதிவு செய்த போபால் போலீசார் அவரை கைது செய்து காவலில் வைத்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் "வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தார் மற்றும் அவரது செயல் நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு குத்தகம் விளைவிக்கும் நோக்கில் உள்ளது" என்று அரசுத் தரப்பு வாதிட்டது.
ஃபைசனுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி தினேஷ் குமார் பாலிவால், விசாரணை முடியும் வரை, மாதத்தின் முதல் மற்றும் நான்காவது செவ்வாய்க் கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் வரை உள்ளூர் காவல் நிலையத்தில் ஃபைசன் ஆஜராகி வேண்டும்.
காவல் நிலையத்திற்கு செல்லும் ஃபைசன் காவல் நிலையத்தின் மீது ஏற்றப்பட்டுள்ள தேசியக் கொடிக்கு 21 முறை மரியாதை செலுத்தி, ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று சொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார். சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில் ஃபைசன் இவ்வாறு முழக்கம் எழுப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“