Pakistan Army chief reaches out to India says time to bury past, move forward : இந்தியாவுடனான பாரம்பரிய உறவை காணும் விதத்தில் பாகிஸ்தான் ராணுவ ஸ்தாபனம் அடைந்திருக்கும் தீவிரமான மாற்றத்தை ராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவின் வியாழக்கிழமை உரை தெளிவுபடுத்தியது. தெற்காசியா மற்றும் இரண்டு நாடுகளுக்குமான பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பு வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான சமாதானத்தை நோக்கிய உரையாடலை மீண்டும் தொடங்குவதற்காக புது தில்லி காஷ்மீரில் ஒரு “உகந்த சூழலை” உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் அதில் வலியுறுத்தினார்.
உயர்மட்ட அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட இஸ்லமாபாத் பாதுகாப்பு உரையாடலில் பேசிய அவர் உகந்த சூழல் என்று எதனை குறிப்பிடுகிறார் என்பதை விவரிக்கவில்லை. பாகிஸ்தானின் மந்திரமான ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்கள் குறித்தோ, ஆகஸ்ட் 5, 2019 அன்று நீக்கப்பட்ட காஷ்மீரின் சிறப்பு அங்கீகாரம் குறித்தோ அவர் பேசவில்லை என்பது மட்டும் உறுதி.
காஷ்மீர் சார்ச்சையை அமைதியான முறையில் தான் தீர்க்க வேண்டும். அதனை விடுத்து அரசியல் ரீதியாக சமரசம் காண முயன்றால் அது தடம் புரண்டுவிடும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும், கடந்த காலத்தினை புதைத்துவிட்டு முன்னேறிச் செல்ல வேண்டிய நேரம் இது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று ராணுவ தளபதி கூறினார். சமாதானம் அல்லது அர்த்தமுள்ள ஆலோசனைகளை துவங்குவதற்கு நமது அண்டை நாடு காஷ்மீரில் உகந்த சூழலை உருவாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
நிலையான இந்தியா பாகிஸ்தானின் உறவுகள் கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவிற்கு இடையேயான தொடர்பை உறுதி செய்வதுடன் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் இது வரை பயன்படுத்தாத திறன்களை எல்லாம் திறப்பதற்கான ஒரு வழி அமையும். அணு ஆயுதங்களை கொண்ட இரண்டு நாடுகளுக்கும் இடையே காஷ்மீர் தலையாய பிரச்சனையாய் இருந்து இந்த திறனை பிணைக்கைதியாய் வைத்திருந்தது என்றார் அவர்.
புதன் கிழமை அன்று, இந்த நிகழ்வின் முதல் முதல்நாளில் பேசிய பிரதமர் இம்ரான் கான் அரசும் நாட்டின் ராணுவமும் இதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறது என்று கூறினார். பிராந்தியத்திற்கான இணைப்பு மற்றும் பொருளாதார செழிப்பு குறித்தும் பேசிய அவர், காஷ்மீர் இவை அனைத்திற்கும் தடையாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார். இந்தியாவுடனான சிறந்த உறவினை ஏற்படுத்த பாகிஸ்தானால் ஆன முயற்சியை மேற்கொண்டுவிட்டோம். இப்போது இந்தியா தன்னுடைய முதல் படியை எடுத்து வைக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், எங்களால் வேறெந்த முடிவையும் எடுக்க முடியாது என்று கூறினார் அவர்.
இந்தியா காஷ்மீர் மக்களுக்கான உரிமைகளை ஐ.நாவின் கீழ் வழங்கினால் அது பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் குறித்து மேற்கோள் காட்டி கூறினார். அப்படி இருந்தும் இதற்கு முன்பு இருந்த பாகிஸ்தானின் காஷ்மீர் குறித்த நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.
ஜெனரல் பஜ்வா மற்றும் பிரதமர் கான் கூறிய கருத்துகளுக்கு இந்தியா தரப்பில் இருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வமான பதில்கள் ஏதும் கிடைக்கவில்லை. அமைதியை குலைப்பதற்கும் வன்முறைக்கு வழிவகுப்பதற்குமாக இருக்கும் முக்கிய விவகாரங்களை அடையாளம் கண்டு தீர்த்துக் கொள்ள இரண்டு தரப்பினரும் ஒப்புக் கொண்டு போர் நிறுத்த கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டனர். அதன் பின்னர் எல்லை தாண்டிய துப்பாக்கிச்சூடு அல்லது சர்வதேச எல்லையை கடத்தல் போன்ற நிகழ்வுகள் ஏதும் நடைபெறவில்லை.
நீண்டகாலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த போர் நிறுத்த உடன்படிக்கையினால் இருபுறமும் உள்ள படைகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இது போர் நிறுத்ததின் பின் இருந்த பெரிய எதிர்பார்ப்புகளை குறைத்துவிட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil