Advertisment

லாகூர் குண்டுவெடிப்பு : இந்தியா மீது குற்றம்சாட்டும் பாக்.

ஹபீஸ் சயீத் வீட்டின் அருகே நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ காரணம் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

author-image
WebDesk
New Update
Lahore blast

பாகிஸ்தானில் உள்ள லக்‌ஷர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சையத் வீட்டின் அருகே நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்தியாதான் காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், பயங்கரவாதத்திற்கு இந்தியா நிதியுதவி செய்வதாகவும் கூறியுள்ளது.

Advertisment

பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஹபீஸ் சையத் வீட்டின் அருகே நடைபெற்ற தாக்குதலால் மூன்று பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். இதற்கு மூளையாக செயல்பட்டது இந்தியர்தான். அந்த நபர் இந்திய உளவு அமைப்பான RAW வுடன் தொடர்புடையவர்" என குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள இம்ரான்கான், " இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை திட்டமிடுவதற்கு, இதற்கான நிதியுதவி அளிப்பது போன்றவற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாதத்திற்கு இந்திய நிதியுதவி வழங்குவதற்கான தொடர்புகள் உள்ளன. இந்த முரட்டு நடத்தைக்கு எதிராக உலகளாவிய சமூகம் முழு நிறுவனங்களையும் அணி திரட்ட வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து அதிகாரப்பூர்வமான பதில் எதுவும் இதுவரை வரவில்லை. எனினும் பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் தவறானவை என தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தகவல்கள் தெரிவித்தன.

publive-image

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண காவல்துறைத் தலைவர் இனாம் கானி மற்றும் பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி ஆகியோர் பங்கேற்ற செய்தியாளர் கூட்டத்தில் யூசுப் உரையாற்றினார்.“ லாகூரில் ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற சம்பவம் குறித்து எங்கள் செய்தி மிகத் தெளிவாக கேட்கப்படுவதை உறுதி செய்ய விரும்புகிறேன். இந்த பயங்கரவாதிகளுக்கு இந்தியா நிதியுதவி வழங்கியது தொடர்பான ஆதாரங்கள் தொலைப்பேசி பதிவுகள் உள்ளன" என்றார்.

பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட மின்னணு உபகரணங்களை தடவியல் துறைக்கு அனுப்பி ஆய்வு செய்ததில், இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் இந்தியாவை சேர்ந்த RAW உளவு அமைப்புடன் தொடர்புடையவர் என யூசுப் கூறினார்.

publive-image

பஞ்சாப் காவல்துறைத் தலைவரான கானி கூறுகையில் "பயங்கரவாத தடுப்புத் துறை தாக்குதலுக்குப் பின்னால் இருந்த முக்கிய குற்றவாளிகளையும், அவர்களுக்கு உதவி செய்தவர்களையும் கைது செய்துள்ளோம். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பீட்டர் பால் டேவிட் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட காரை பீட்டர் ஏற்பாடு செய்தார். அவருக்கு வழங்கப்பட்ட பணம், அவரது வாட்ஸ்அப் அழைப்புகள் மற்றும் பிற அனைத்து பதிவுகளும் எங்களிடம் உள்ளன” என்றார்.

ஜூன் 25ஆம் தேதி லாகூரின் ஜோஹர் டவுனில் குண்டுவெடிப்பு நடந்த 2 நாட்களுக்கு பிறகு, வெளிநாட்டவர் ஒருவர் கராச்சியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் அழைத்து செல்லப்பட்டு விசாரணைக்கு வெளியிடப்படாத இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இவர் தான் பீட்டர் பால் டேவிட்.

எங்களிடம் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பின் உளவுத்துறை இருப்பதாகவும், சந்தேகத்திற்கு இடமின்றி இந்த முழு தாக்குதல் இந்திய ஆதரவிலான பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கிறது என யூசுப் கூறினார்.

இந்த குண்டுவெடிப்பில் 6 வயதான அப்துல் ஹக், அவனது தந்தை அப்துல் மாலிக் (50) மற்றும் ஒரு சாலையில் சென்ற ஒரு இளைஞர் ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் சாலையில் 4 அடி ஆழமும் 8 அடி அகலமும் கொண்ட பள்ளம் ஏற்பட்டது. அங்குள்ள பல வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்தது. மும்பை பயங்கரவாத தாக்குதல்களின் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் காயமடையவில்லை.

இருதரப்பு உறவையும் மேம்படுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த சூழலில் பாகிஸ்தான் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாகிஸ்தான் ராணுவத் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியை கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வந்தார். பிப்ரவரியில், இரு தரப்பினரும் எல்லையில் உள்ள யுத்த நிறுத்த உடன்படிக்கையை கடைபிடிக்க ஒப்புக்கொண்டனர். தற்போது 4 மாதங்களாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஜூன் 23-24 தேதிகளில், துஷன்பேவில் நடந்த NSAக்களின் கூட்டத்தில் தோவலும், யூசுப்பும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், தோவல் லக்ஷர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு எதிராக ஒரு திட்டத்தை முன்மொழிந்தார். "எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்கள் உட்பட பயங்கரவாத குற்றவாளிகள் விரைவாக சட்டத்திற்கு முன் கொண்டு வர வேண்டும்" என்று அவர் கூறியிருந்தார், மேலும் "ஐ.நா. தீர்மானங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், ஐ.நா. அறிவித்த பயங்கரவாத நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளையும்" எடுத்துக் காட்டியுள்ளார். சயீத் மற்றும் ஜே.எம் தலைவர் மசூத் அசார் ஆகியோருக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஜூன் 27ஆம் தேதி ஜம்மு விமானப்படை தளத்தின் தொழில்நுட்ப பகுதியில் வெடிப்பொருட்கள் நிரப்பிய ட்ரோன் மூலம் தாக்குல் நடத்தப்பட்டது. முன்னதாக ஜூன் 26ஆம் தேதி, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மேல ட்ரோன் இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் கூறுகையில், "ஐம்மு விமானப் படைத் தளத்தில் ட்ரோன் மூலம் நடைபெற்ற தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த காலங்களில் ஆயுதங்கள், போதைப்பொருள்களை கடத்த லக்ஷர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு ட்ரோன்களை பயன்படுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், விமானப் படைத் தளத்தில் நடைபெற்ற தாக்குதலின் பின்னணியில் அந்த அமைப்பு இருக்கலாம் என வலுவான சந்தேகம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

லாகூர் குண்டுவெடிப்பு நடந்த நாளன்று பாகிஸ்தானின் தகவல் உள்கட்டமைப்பு மீது ஆயிரக்கணக்கான ஒருங்கிணைந்த இணைய தாக்குதல்களைக் கண்டதாக யூசுப் ஞாயிற்றுக்கிழமை கூறினார். சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளதால் விசாரணை வெற்றிகரமாக நடைபெறுவது கடினம். மேலும் இது தடைகளை எதிர்கொள்ளும். ஜோஹர் டவுன் மற்றும் சைபர் தாக்குதல்கள் தொடப்பு உள்ளவை என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இதில் இந்தியாவின் பங்கு உள்ளது. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பணம் இந்தியாவினுடையது எனவும். மூன்றாம் தரப்பு நாடுகள் வழியே நிதி அனுப்பப்பட்டுள்ளது. இப்போது உண்மையான குற்றவாளிகளை கண்டறிய கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என யூசுப் கூறினார்.

இந்த தாக்குதலை நடத்திய நபர் ஈத் குல் முதலில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும் பாகிஸ்தானில் வசித்து வந்ததாகவும் கானி கூறினார். "உளவுத்துறையை மேற்கொள்வதற்கும் தாக்குதலை நடத்துவதற்கும் பணியை ஒப்படைத்த நபரை அடையாளம் கண்டுள்ளோம்," என்று அவர் கூறினார்.

சந்தேகப்படும் மற்றொரு நபர் தாக்குதலில் பயன்படுத்திய காரை பீட்டரிடமிருந்து லாகூர் எடுத்து சென்றார். சியாவுல்லா என்ற அந்த நபர் காரை குலிடம் ஒப்படைத்த பீட்டருக்கு பணம் வழங்கினார். அடையாளம் தெரியாத நபரால் தாக்குதலை நடத்த குல் பணிக்கப்பட்டுள்ளார் என கானி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pakistan Bomb Blast
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment