வட்டாரங்களின்படி, இந்திய ராணுவ நிலைகளையும் பிற முக்கியமான இடங்களையும் வரைபடமாக்குவதற்காக அனுப்பப்பட்ட கண்காணிப்பு டிரோன்களில் பாகிஸ்தான் LiDAR (ஒளி கண்டறிதல் வரம்பு) தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியது. அனைத்து டிரோன்களின் தோற்றம் தெளிவாக இல்லாவிட்டாலும், பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களில் சில துருக்கிய UAV-கள் பயன்படுத்தப்பட்டதாக இந்தியா கூறியுள்ளது.
இந்தியாவால் நிலைநிறுத்தப்பட்ட பல்வேறு வான் பாதுகாப்பு தளங்கள் மற்றும் உபகரணங்கள், மேற்பரப்பில் இருந்து வான் ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு துப்பாக்கிகளைப் பயன்படுத்தி, இந்த டிரோன்கள் ஊடுருவிய உடனேயே அவற்றை திறம்பட கண்காணித்து வீழ்த்தின.
"ஜம்மு-காஷ்மீரில் உள்ள இந்த டிரோன்களில் பெரும்பாலானவை ராணுவத்தின் பழைய சோவியத் வம்சாவளியை சேர்ந்த L/70 துப்பாக்கிகளால் உள்நாட்டு வெடிபொருட்களைப் பயன்படுத்தி சுட்டு வீழ்த்தப்பட்டன. இதனால், மற்ற அதிநவீன மற்றும் புதிய தலைமுறை ஏவுகணைகள் பிற பணிகளுக்காகப் பாதுகாக்கப்பட்டன" என்று தகவலறிந்த வட்டாரம் தெரிவித்தது.
திங்களன்று, இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறித்து அழிக்கப்பட்ட பாகிஸ்தானிய விமான தளங்களில் ஏற்பட்ட சேதத்தின் காட்சி ஆதாரங்களையும், பல்வேறு பாக்., டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் காட்சி ஆதாரங்களையும் ஆயுதப்படைகள் வெளியிட்டன.
தற்போதைய நடவடிக்கைகளில் பாக்., அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் போரில் நிரூபிக்கப்பட்ட பெச்சோரா, ஓசா-ஏகே மற்றும் எல்எல்ஏடி போன்ற வான் பாதுகாப்பு ஆயுதங்கள் முக்கிய பங்கு வகித்ததாக அவர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில் ஆகாஷ் அமைப்பு போன்ற உள்நாட்டு வான் பாதுகாப்பு ஆயுதங்களின் சிறந்த செயல்திறனையும் அவர்கள் எடுத்துரைத்தனர்.