Advertisment

சார்க் வெளியுறவுக் கூட்டத்தை புறக்கணித்த பாகிஸ்தான்... "இது என்ன நாடகம்?" - இந்தியா விமர்சனம்!

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்ட பிறகு, இரு நாட்டு தலைவர்களும் கலந்து கொள்ளும் முக்கியமான நிகழ்வு இதுவாகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சார்க் வெளியுறவுக் கூட்டத்தை புறக்கணித்த பாகிஸ்தான்... "இது என்ன நாடகம்?" - இந்தியா விமர்சனம்!

 Shubhajit Roy

Advertisment

Pakistan Foreign Minister Shah Mahmood Qureshi boycotts Jaishankar :  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்காக நடைபெறும் சார்க் நாடுகளின் கூட்டத்தில் பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி கலந்து கொள்ளவில்லை. வியாழக்கிழமை நடைபெற்ற இந்த கூட்டத்தில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் கலந்து கொண்டதால் அவர் அந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. ஜெய்ஷங்கர் அந்த அவையில் இருந்து வெளியேறிய பின்னரே ஷா முகமது குரேஷி உள்ளே வந்தார்.

காஷ்மீரை கொன்றவர்கள் இருக்கின்ற அவையில் நான் நுழைவேன் என்று நினைத்தீர்களா என்று அவர் கேள்வி எழுப்பினார். சார்க் மாநாட்டில் கலந்து கொண்டு அங்கே நடந்து கொண்டிருப்பதை எல்லாம் ட்விட்டரில் டீவிட்டாக வெளியிட்ட வண்ணம் இருந்தார் ஜெய்ஷங்கர். “தவறவிட்ட வாய்ப்புகளை மட்டும் எண்ணிக் கொண்டிருக்கவில்லை. தடைகள் என்ன என்பதையும் ஆராய்ந்து வருகிறோம். தீவிரவாதத்தினை எந்த வடிவில் வந்தாலும் அதனை நாம் எதிர்க்க வேண்டும். அது நாம் வாழும் பகுதிக்கு அதிக பலனை அளிக்கக் கூடியது” என்று அவர் டீவிட் வெளியிட்டிருந்தார்.

குரெஷி சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தை குறித்து இந்த அரசு நிர்வாகிகள் நாடகம் என்று குறிப்பிடுகின்றனர். இது சார்க் மாநாட்டில் தேவையற்ற குழப்பத்தை உண்டாக்கும் என்றும் கூறிவருகின்றனர்.

To read this article in English

இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வெஸ்டின் ஹோட்டலுக்குள் மதியம் 01:01 மணிக்கு (அமெரிக்க நேரப்படி) சென்றார் ஜெய்ஷங்கர். தெஹ்ரீக் - இ - இன்சாஃப் - பாகிஸ்தானின் ஆளும் கட்சி ட்விட்டர் பக்கத்தில் சரியாக 01:19 மணிக்கு “இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் கலந்து கொண்டிருக்கும் இந்த சார்க் கவுன்சில் மீட்டிங்கில் பாகிஸ்தானின் குரேஷி கலந்து கொள்ளமாட்டார்” என்று குறிப்பிட்டப்பட்டிருந்தது. அவர் 01:48 மணிக்கு அவையில் இருந்து வெளியேற, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் 01:54 மணிக்கு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். பாகிஸ்தானின் முக்கிய அதிகாரிகள் ஏற்கனவே அந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

இந்திய அதிகாரிகள் பலரும் அதே கூட்டத்தில் இருந்தனர். பலரும் ஜெய்ஷங்கருடன் வெளியேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே இடத்தில் தான் 25ம் தேதி நரேந்திர மோடி ஐநாவின் ஜெனரல் அசெம்பெளி நிகழ்வில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் சுஷ்மா ஸ்வராஜ் இதே அரங்கில் தான் வெளியுறவுத்துறை அமைச்சராக தன்னுடைய உரையை நிகழ்த்தினார். குரேஷி அங்கு பேசும் போது, சுஷ்மா ஸ்வராஜ் அந்த அரங்கில் இல்லை. இரு நாட்டு பேச்சுவார்த்தை நடைபெறாது என்று இந்தியா திட்டவட்டமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்ட பிறகு, இரு நாட்டு தலைவர்களும் கலந்து கொள்ளும் முக்கியமான நிகழ்வு இதுவாகும். ஜூலை மாதம் காமன்வெல்த் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் இருவரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரத்தில் மட்டும் மூன்று முறைக்கும் மேலாக இந்திய மற்றும் பாகிஸ்தான் பிரதமர்களிடம் சமரசம் உண்டு செய்யும் முயற்சியில் ஈடுபட்டார் அமெரிக்க அதிபர் டொன்லாட் ட்ரெம்ப் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் இருவரும் நல்ல மனிதர்கள். இரு நாட்டினை ஆட்சி செய்து வருகின்றீர்கள். அணு ஆயுத நாடுகளும் கூட. இருவரும் ஒன்றிணைந்து நாட்டின் வளர்ச்சிக்காக சமரசம் ஆகுங்கள் என்று கூறினார்.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோஹலே குறிப்பிடுகையில் “நாங்கள் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தயங்கவில்லை என ட்ரெம்பிடம் மோடி அறிவித்துள்ளார்” என்று கூறியுள்ளார். ஆனால் அது நடைபெற வேண்டுமெனில், பாகிஸ்தான் சில முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி ஒன்றும் மேற்கொண்ட மாதிரி தெரியவில்லை என்பதையும் அவர் மேற்கோள் காட்டினார்.

மேலும் படிக்க : 75 சதவிகித தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு ஹிந்து தமிழ் புலிகளே காரணம் – இம்ரான் கான்

India Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment