3-ம் நாடுகள் வழியாக பாகிஸ்தான் சரக்குகள் கொண்டு செல்லத் தடை: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தப்பட்டிருந்தாலும், பாகிஸ்தானில் இருந்து 3-ம் நாடுகள் வழியாக இந்தியாவிற்குள் நுழையும் பொருட்களை அரசாங்கம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தப்பட்டிருந்தாலும், பாகிஸ்தானில் இருந்து 3-ம் நாடுகள் வழியாக இந்தியாவிற்குள் நுழையும் பொருட்களை அரசாங்கம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

author-image
WebDesk
New Update
Pakistan goods in transit

3-ம் நாடுகள் வழியாக பாக்., பொருட்கள் கொண்டு செல்லத் தடை

மத்திய நிதி அமைச்சின் கீழ் செயல்படும் கடத்தல் தடுப்பு பிரிவு அமைப்பான வருவாய் புலனாய்வு இயக்ககம் (DRI), பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) போன்ற 3-ம் நாடுகள் வழியாக இந்தியாவுக்குள் அனுப்பப்படும் பொருட்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன என்று அரசு அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.

Advertisment

மத்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகம் மே 2-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின் படி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் அடுத்து, பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட அல்லது அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களையும் இறக்குமதி மற்றும் டிரான்சிஸ்ட் பொருட்களைத் தடுப்பதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சுங்கத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: Pakistan goods in transit via third country being banned

அரசு அதிகாரி கூறியதாவது, பாகிஸ்தானிலிருந்து வரும் சரக்குகளை அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. மே 2-ந் தேதி வெளியான அரசாணைக்கு முந்தைய காலத்தில் டிரான்சிஸ்ட்-ஆக அனுப்பப்பட்டிருந்த சரக்குகள் கூட தற்போது இந்தத் தடையின் கீழ் வரும். ஏற்கனவே கடலில் பயணத்தில் உள்ள சரக்குகளுக்கு விலக்கு அளிக்கப்படும்.

Advertisment
Advertisements

"சந்தேகம் ஏற்படும் போதெல்லாம் சுங்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. சில துறைமுகங்களில், வருவாய் புலனாய்வு இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது. உதாரணமாக, பாகிஸ்தான் கொடியுடன் வந்த கப்பலுக்கு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி மறுகப்பட்டது. வர்த்தக இழப்புகள் குறித்து வணிகர்கள் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு முறையிடுகின்றனர். ஆனால், இந்தத் தடை அறிவிப்பு அவசியமானதாக இருந்தது. கண்காணிப்பை பலப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது" என்று அவர் தெரிவித்தார்.

"3-ம் நாடுகளின் வழியாக வரும் சரக்குகள் தொடர்பாக, அவை பாகிஸ்தானைச் சேர்ந்தவையா என்பதை rules-of-origin சான்றிதழ்கள் மூலம் மட்டுமே அடையாளம் காண்பது சில நேரங்களில் கடினமாக இருக்கும். ஆனால், லேபிள் சரிபார்ப்புகள் போன்ற நுணுக்கமான ஆய்வுகள் மூலம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொருளின் உண்மையான தோற்றம் வெளியே வருகிறது" என அவர் கூறினார்.

பாகிஸ்தானில் உற்பத்தியாகும் பேரிச்சம்பழம் மற்றும் உலர் பழங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) வழியாக இந்தியாவிற்கு நுழைந்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக அரசு அதிகாரி கூறினார். இதுகுறித்து எமிரேட்ஸ் அரசிடம் புகாரளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். "ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பேரிச்சம்பழம் மற்றும் உலர் பழங்களை உற்பத்தி செய்கின்றனர் எனத் தெரிவித்து, உற்பத்தி விவரங்களை வழங்கியுள்ளது. ஆனால், கடுமையான அறிவிப்புகள் இதுபோன்ற வழிகளை தடுக்கும் ஒரு முன்னெச்சரிக்கையாக செயல்படுகின்றன. இதுபிற நாடுகளும் விதிகளை மீறாமல் இருக்க உதவும் என்று அதிகாரி கூறினார்.

மே 2-ம் தேதி தடை அறிவிப்புக்கு முந்தைய கட்டத்தில், ஏற்கனவே இந்தியா பாகிஸ்தானுடன் நேரடி வர்த்தகத்தை நிறுத்தியிருந்தது. ஏப்.24 அன்று, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அட்டாரியில் அமைந்த ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை (ICP) மூடுவதன் மூலம் நேரடி வர்த்தகம் நிறுத்தப்பட்டது. இந்த நடவடிக்கை, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ரூ.3,886 கோடி மதிப்புள்ள எல்லை வர்த்தகத்தை நிறுத்தும் வகையில் இருந்தது. “குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (GTRI)” கணக்கீட்டின்படி, $10 பில்லியன் மதிப்புள்ள இந்திய சரக்குகள் டிரான்சிஸ்ட் வழியாக பாகிஸ்தானுக்கு சென்றுள்ளன.

2019 புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாக்., இடையேயான உறவுகள் மேலும் மந்தமாகிய நிலையில், இருநாட்டு வர்த்தகம் ரூ.4,370.78 கோடியில் இருந்தது (2018–19) மற்றும் ரூ.2,257.55 கோடிக்கு (2022–23) குறைந்தது. ஆனால் 2023–24 ஆம் ஆண்டில் வர்த்தகம் மீண்டும் ரூ.3,886.53 கோடிக்கு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல், 2018–19ல் 49 ஆயிரத்து 102 சரக்கு ஏற்றுமதிகளில் இருந்து, 2022–23ல் இது 3,827க்கு குறைந்துள்ளதையும் தரவுகள் காட்டுகின்றன.

டாலர் மதிப்பில், கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா-பாக்., ஆண்டு வர்த்தகம் சுமார் $2 பில்லியனாகக் குறைந்துள்ளது. இது உலக வங்கி மதிப்பிட்டுள்ள $37 பில்லியன் வர்த்தக திறனில் ஒரு சிறிய பகுதியே. இந்தியாவின் ஒட்டுமொத்த பொருட்கள் வர்த்தகம் $430 பில்லியனாகவும், பாகிஸ்தானின் வர்த்தகம் சுமார் $100 பில்லியனாகவும் உள்ளது.

இந்த வர்த்தகக் கட்டுப்பாடுகள், 1990-களின் இறுதியில் நிலவிய நிலைமையிலிருந்து முக்கியமான திருப்புமுனையை குறிக்கின்றன. அப்போது, இருதரப்பு வர்த்தகத்தை ஊக்குவிக்க இந்தியா முன்வந்து, 1996-ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு "அதிகப் பாராட்டப்படும் நாடு" (Most Favoured Nation - MFN) அந்தஸ்தை வழங்கியது. இதன்மூலம் இருநாட்டு வர்த்தக அளவுகளில் பெரிதும் அதிகரிப்பு ஏற்பட்டது. ஆனால் பாகிஸ்தான் இதற்கு எதிராக இந்தியாவுக்கு ஒருபோதும் அதே அந்தஸ்தை வழங்கவில்லை. 2019-ல் புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்கான MFN அந்தஸ்தை திரும்பப் பெற்றது.

Pakistan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: