இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, அக்டோபர் மாதத்தில் ராணுவத்தில் பணி புரியும் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாகிஸ்தான் உளவுத்துறையில் இருக்கும் நபர்கள் பாபாக்கள் போலவும், குருவாகவும் செயல்பட்டு இந்திய ராணுவத்தினரின் நம்பிக்கையை பெற முயற்சி செய்து வருகின்றனர்.
அவர்களின் நம்பிக்கையை பெற்ற பின்பு வாட்ஸ்ஆப் மற்றும் ஸ்கைப் போன்ற வீடியோ சாட்டிலும் பேசி மிக முக்கிய தகவல்களை அவர்கள் ராணுவத்தினரிடம் கறக்க முற்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போலி சாமியார்களாக செயல்படும் சமூக வலைதள கணக்குகள் குறித்தும் அந்த நோட்டீஸில் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. சாமியார், குரு, பாபா என்பதெல்லாம் போய் ஒரு சில கணக்குகள் பெண்கள் பெயரில் தொடங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை 150க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் உளவுத்துறையினர் போலிக் கணக்குகள் வைத்து சமூக வலைதளங்களில் உலவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெண்கள் போன்று போலி கணக்குகளில் உளவுவது, லாட்டரி விற்பனை, செய்ன் மார்கெட்டிங், ஆப்கள் என அனைத்து விதமாகவும் உலவி வருகின்றனர் அவர்கள். முகநூல், ட்விட்டர், வாட்ஸ்ஆப், டிக்டாக், டெலிக்ராம், ஸ்கைப், யூ.டியூப் போன்ற அனைத்து சமூக வலைதளங்களிலும் இவர்கள் போலி கணக்குகளில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
To read this article in English