ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ரஷ்ய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிகோலாய் பட்ரூஷேவ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாகிஸ்தான் சார்பில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிறப்பு உதவியாளர் மொயீத் யூசுஃப் உட்பட உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமாயணம் நாடகம் ; முக்கிய கதாப்பாத்திரத்தில் பாஜக எம்.பிக்கள்!
கூட்டத்தின்போது, மொயீத் யூசுஃப் ஜம்மு-காஷ்மீரை பாகிஸ்தான் பிரதேசமாக சித்தரிக்கும் வரைபடத்தை காண்பித்து பேசினார். இதற்கு அஜித் தோவல் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ``பாகிஸ்தானின் இச்செயல் எஸ்சிஓ அமைப்பின் விதிமுறைகளை அப்பட்டமாக மீறுவதாக இருக்கிறது" என்று சாடினார். ரஷ்ய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிகோலாய் பட்ரூஷேவ்வும், விதி மீறிய வரைபடத்தை பயன்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தியும், பாகிஸ்தானினின் மொயீத் அதை கண்டுகொள்ளவில்லை. இதனால் தனது தரப்பு எதிர்ப்பை பதிவு செய்துவிட்டு, அஜித் தோவல் கூட்டத்தை விட்டு வெளியேறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக பேசியுள்ள, இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, ``பாகிஸ்தான் என்எஸ்ஏ வேண்டுமென்றே ஒரு கற்பனையான வரைபடத்தை கூட்டத்தில் முன் வைத்தது. இது கூட்டத்தின் விதிமுறையை மீறுவதாகும். பின்னர் ரஷ்ய ஆலோசகருடன் கலந்தாலோசித்த பிறகு, இந்திய தரப்பின் எதிர்ப்பை பதிவு செய்துவிட்டு கூட்டத்தில் இருந்து வெளியேறினார் அஜித் தோவல். வரைபடத்தில் ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தானின் ஒரு பகுதியாகவும் சித்தரிக்கப்பட்டு இருந்தது. உடனே இந்தியா, இந்த நடவடிக்கையை ``அரசியல் அபத்தம்" என்று கடுமையாக சாடியது. எனினும் ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் பட்ருஷேவ், உச்சிமாநாட்டில் கலந்து கொண்டதற்காக அஜித் தோவாளை "தனிப்பட்ட முறையில் மிகவும் நன்றியுள்ளவனாக" இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தான் செய்ததை ரஷ்யா ஆதரிக்கவில்லை, பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் செயல் எஸ்சிஓவில் இந்தியாவின் பங்களிப்பை பாதிக்காது என்று நம்புகிறோம்" என்று விவரித்தார். இந்திய தரப்பு இப்படி தெரிவிக்க, பாகிஸ்தானை ஆளும், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் டுவிட்டர் பதிவில், ``ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) அதன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் ஆன்லைன் கூட்டத்தை நடத்தியது, அங்கு இந்தியாவின் மோசமான கூற்றுக்கள் நிராகரிக்கப்பட்டன. எஸ்சிஓ பாகிஸ்தானின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டது. மொயீத் யூசுப் பாகிஸ்தானின் புதிய அரசியல் வரைபடத்துடன் எஸ்சிஓ சந்திப்பை நடத்தினார்" என்று மாற்றி கூறியுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்தில் 7.5% இட ஒதுக்கீடு
பாகிஸ்தான் காண்பித்த இந்த புதிய அரசியல் வரைபடம் பாகிஸ்தான் அரசாங்கத்தால், ஜம்மு காஷ்மீரின் 370 வது பிரிவின் கீழ் சிறப்பு நிலை ரத்து செய்யப்பட்டு, ஒரு வருடம் நிறைவடைவதற்கு ஒரு நாள் முன்னதாக அதாவது ஆகஸ்ட் 4 ஆம் தேதியே வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”