Pakistan PM Imran Khan : தரைவழியாக ஆப்கானிஸ்தானுக்கு உணவு தானியங்களை அனுப்புவதற்காக இந்தியா பாகிஸ்தானை அணுகிய ஒரு மாதத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் உள்ள தலிபான் தூதுக்குழுவிடம், ஆப்கன் சகோதரர்களின் போக்குவரத்துக்கான கோரிக்கையை தனது நாடு சாதகமாக பரிசீலிக்கும் என்று கூறினார். விதிவிலக்கு அடிப்படையில் இந்த முடிவு மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினரர்.
குளிர்காலம் நெருங்கி வருவதால் ஆப்கானிஸ்தானில் அவசரமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, போக்குவரத்து முறைகள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் “தற்போதைய சூழலில், மனிதாபிமான நோக்கங்களுக்காக விதிவிலக்கான அடிப்படையிலும், வகுக்கப்பட வேண்டிய முறைகளின்படியும் இந்தியா வழங்கும் கோதுமையை பாகிஸ்தான் வழியாக கொண்டு செல்வதற்கான ஆப்கான் சகோதரர்களின் கோரிக்கையை பாகிஸ்தான் சாதகமாக பரிசீலிக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
பாகிஸ்தான் பிரதமர் கான் மற்றும் நிதி மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்கள் மற்றும் தூதுக்குழுவின் மூத்த உறுப்பினர்களை ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி சந்தித்து பேசிய பிறகு இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. நாடு எதிர்கொள்ளும் கடுமையான சவால்களை சமாளிக்க ஆப்கானிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு பாகிஸ்தானின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார் பிரதமர் கான் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
50,000 மெட்ரிக் டன் கோதுமையை ஏற்றிச் செல்லும் டிரக்குகளை ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்ல அனுமதிப்பதற்காக இந்தியா அக்டோபர் முதல் வாரத்தில் பாகிஸ்தானுக்கு வாய்மொழியாக கோரிக்கை ஒன்றை அனுப்பியது. குளிர்காலம் நெருங்கி வருவதாலும், நிதி நெருக்கடியால் ஆப்கானிஸ்தானை முடக்கிவிட்டதாலும், அந்நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று நம்பப்படுகிறது.
ஏற்கனவே சீனா, துருக்கி போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தானிற்கு உணவுப் பொருட்களை விநியோகிக்க துவங்கிவிட்டன. ஆப்கானிஸ்தான் மக்களிடையே அதிக நன்மதிப்பைக் கொண்ட இந்தியாவும் தனது பங்கைச் செய்ய விரும்புகிறது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
50,000 மெட்ரிக் டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்லும் பணிக்கு பாகிஸ்தான் வழியாக 5,000 டிரக்குகளை அனுப்ப வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்லமாபாத் இந்த திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் அணுகுகிறது. ஆனால் கூறப்பட்டுள்ள ட்ரக்குகளின் அளவு மற்றும் சாலைகள் குறித்து ஆலோசிக்க திட்டமிட்டுள்ளது.
வாகா-அட்டாரி எல்லையில் உள்ள ஜீரோ பாயின்ட்டில் கோதுமையை இறக்கி மீண்டும் ஏற்ற வேண்டும் என்பதால் இந்திய லாரிகளை அனுமதிக்க வேண்டியிருக்கலாம் என்று தளவாடங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில், ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு குறித்து பிராந்தியத்தில் உள்ள முக்கிய நாடுகளின் (சீனா மற்றும் பாகிஸ்தான் தவிர்த்து) தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து சாதகமாக கூறினார் தாலிபானின் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாஹித். அதன் பின்னர் பாகிஸ்தான் பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியானது.
இந்தியாவில் நடைபெறும் மாநாடு குறித்து, ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை பிராந்தியம் கவனித்திருக்க வேண்டும் மற்றும் ஆப்கானிஸ்தானின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அதிக நன்மை பயக்கும் என்று கருதுகிறது. இந்த பிராந்தியத்தில் இந்தியாவும் மிக முக்கியமான நாடு. எனவே நாங்கள் அவர்களுடன் நிலையான இராஜதந்திர உறவுகளை விரும்புகிறோம். ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்ஸ் கொள்கை என்னவென்றால், அதன் நிலம் எந்த நாட்டிற்கும் எதிராக பயன்படுத்தப்படாது என்பது தான். நாங்கள் பரஸ்பர ஒத்துழைப்பை விரும்புகிறோம் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மூலம் பெறப்பட்ட அவரது கருத்துகளின் டிரான்ஸ்கிரிப்ட்டில் இடம் பெற்றுள்ளது.
நாங்கள் அந்த கூட்டத்தில் இல்லை என்றாலும், இந்த மாநாடு ஆப்கானிஸ்தானின் சிறந்த நலனுக்காக மேற்கொள்ளப்பட்டது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். , ஏனெனில் முழு பிராந்தியமும் தற்போதைய ஆப்கானிஸ்தான் நிலைமையைக் கருத்தில் கொண்டு, பங்கேற்கும் நாடுகளும் மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் சிந்திக்க வேண்டும். ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை மற்றும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய தற்போதைய அரசாங்கத்திற்கு உதவ முன்வர வேண்டும் என்று நம்புகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பை நிறுவுவதற்கு பிராந்திய நாடுகளுக்கு வணிகம் மற்றும் பொருளாதாரத்தில் ஒத்துழைப்பும் காலத்தின் தேவையாகும். இந்தியாவில் நடைபெறும் மாநாட்டில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையோ கவலையோ இல்லை, இந்த மாநாட்டின் நேர்மறையான முடிவுகள் பயன்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார் அவர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.