Advertisment

பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் பயங்கர குண்டு வெடிப்பு: மணிக்கு மணி அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

தென்மேற்கு பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 21 பேர் பலி, 46 பேர் காயமடைந்த நிலையில் வெடிகுண்டு வெடித்த இடத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
war death

பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு

தென்மேற்கு பாகிஸ்தானின் குவெட்டாவில் உள்ள ரயில் நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 21 பேர் பலியான நிலையில் 46 பேர் காயமடைந்தனர். குவெட்டா ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடித்த இடத்தை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: 

21 killed, 46 injured in blast at Pakistan’s railway station; Baloch Liberation Army claims responsibility

இந்த குண்டு வெடிப்பிற்கு பலூச் விடுதலை இராணுவம் காரணமாக இருக்க கூடுமோ என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பலுசிஸ்தான் முதல்வர் சர்ஃப்ராஸ் புக்டி இந்த தாக்குதலை கண்டித்து, "அப்பாவி பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட கொடூரமான செயல்" என்று குறிப்பிட்டு, உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 

குவெட்டா ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடித்த இடத்தை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முதல்கட்ட விசாரணையில் இந்த குண்டு வெடிப்பு ஒரு தற்கொலை குண்டுவெடிப்பு என போலீசார் தெரிவித்துள்ளனர். 

குவெட்டா ரயில் நிலையத்தில் முன்பதிவு அலுவலகத்தில் இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்பு நேரத்தில், ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் பெஷாவருக்கு புறப்படுவதற்கு முன்னதாக பிளாட்பாரத்தில் பயணிகள் கூடியிருந்த நிலையில்  பலி எண்ணிக்கை உயரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இந்த குண்டுவெடிப்பில் பிளாட்பாரத்தின் மேற்கூரையும் சேதமடைந்த நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவாதாகவும் காயமடைந்தவர்கள் மற்றும் பலியானவர்களை மீட்கும் பணி தீவிரமாகவும் நடைபெறுகின்றன. 

மீட்பு படையினர் வெடிகுண்டு நடந்த இடத்தில் இருக்கும் மக்களை உடனடியாக வெளியேற்றி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் பணியில் ஈடுபட்டனர்.  மருத்துவமனையில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கூடுதல் மருத்துவ ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்கள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருவதாகவும், அதற்கு காரணமானவர்களை விரைவில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பலுசிஸ்தான் முதல்வர் சர்ஃப்ராஸ் புக்டி உறுதியளித்தார்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ 

Death Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment