/indian-express-tamil/media/media_files/2025/04/24/fDo8COxvTKBckre8qmyR.jpg)
காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல ராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்த ஒரு நாளுக்குப் பிறகு, பாகிஸ்தான் தலைவர் இஸ்லாமாபாத்தில் இருந்து இன்று வெளியாகியுள்ள தகவலின் படி, "சிம்லா ஒப்பந்தம் உட்பட, இந்தியாவுடனான அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைக்கும்" என்று கூறியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Pakistan suspends trade with India, says diverting Indus water ‘an act of war’, closes air space
காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக நேற்று, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. அதனைத் தொடாந்து, பாகிஸ்தானுடனான ராஜதந்திர உறவுகளை குறைப்பதாக அறிவத்த இந்தியா, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் இருந்து தூதர்கள் மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளை வெளியேற்றியது.
பாகிஸ்தான் நாட்டினருக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களையும் ரத்து செய்தது. மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டு, அட்டாரி-வாகா எல்லையை மூடியது. இந்தியாவில்இந்த நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றும் விதமாக, பாகிஸ்தான் பிரதமர் முகமது ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் தேசிய பாதுகாப்புக் குழுவின் (NSC) கூட்டத்திற்குப் பிறகு சில அறிவிப்புகள வெளியிட்டுள்ளது.
அதன்படி, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்கான இந்தியாவின் அறிவிப்பை பாகிஸ்தான் "வன்மையாக நிராகரிப்பதாகவும்", சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தானுக்குச் சொந்தமான நீர் ஓட்டத்தைத் தடுக்க அல்லது திசைதிருப்ப முயற்சியும் மேற்கொள்ளப்படுவதாகவும், கீழ் நதிப் பகுதியின் உரிமைகளை அபகரிப்பது "போர்ச் செயல்" என கருதப்படும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்குச் சொந்தமான அல்லது இந்தியாவால் இயக்கப்படும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் பாகிஸ்தானின் வான்வெளி உடனடியாக மூடப்படும். பாகிஸ்தான் வழியாக எந்தவொரு நாட்டிற்கும் மற்றும் இந்தியாவிலிருந்து வரும் அனைத்து வர்த்தகமும் உட்பட, இந்தியாவுடனான அனைத்து வர்த்தகமும் உடனடியாக நிறுத்தப்படும். மேலும், வாகா எல்லைச் சாவடியை மூடுவதாகவும், உயர் ஸ்தானிகராலயத்தின் எண்ணிக்கையை 30 ஆகக் குறைப்பதாகவும், இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் இருந்து பாதுகாப்பு சேவை அதிகாரிகளை வெளியேற்றுவதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.