/tamil-ie/media/media_files/uploads/2019/09/loc-1.jpg)
pakistan raises white flag, pakistan retrieves bodies, pakistan loc bodies, hajipur sector, pakistan army, india pakistan news, indian express, பாகிஸ்தான், வெள்ளைக்கொடி, எல்லைக்கோடு, இந்திய ராணுவம், துப்பாக்கிச்சூடு
இந்திய - பாகிஸ்தான் எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் படையினர் வெள்ளைக்கொடி காட்டிய வீடியோவை, இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
#WATCH Hajipur Sector: Indian Army killed two Pakistani soldiers in retaliation to unprovoked ceasefire violation by Pakistan. Pakistani soldiers retrieved the bodies of their killed personnel after showing white flag. (10.9.19/11.9.19) pic.twitter.com/1AOnGalNkO
— ANI (@ANI) September 14, 2019
இந்திய - பாகிஸ்தான் எல்லைக்கோடு அருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஷஜிபிர் செக்டார் அருகே, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்திய ராணுவம், இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். இந்திய படையினரின் தாக்குதலை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் ராணுவம் பின்வாங்கியது. இந்த சம்பவத்தால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
பாகிஸ்தான் ராணுவம், உயிரிழந்த வீரர்களின் சடலங்களை அங்கேயே விட்டு சென்றுவிட்டது. இந்நிலையில், அந்த சடலங்களை பெறுவதற்காக, பாகிஸ்தான் படையினர் வெள்ளைக்கொடி காட்டினர். 1 நிமிடம் 47 விநாடிகள் காலஅளவிலான இந்த வீடியோவை, இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.