scorecardresearch

அமரிந்தருடன் நட்பு பாராட்டிய பாகிஸ்தான் பத்திரிகையாளர்

பாகிஸ்தான் பத்திரிகையாளரான அரூசா அலம் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையே அமைதி நிலவிட விரும்பியவர் என்றும் அமரிந்தர் சிங்குனான அவருடைய அழகான புனிதமான நட்பை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேசுபொருளாக மாற்றியுள்ளனர் என்றும் மனுராஜ் கிரிவால் சர்மா தெரிவித்துள்ளார்.

அமரிந்தருடன் நட்பு பாராட்டிய பாகிஸ்தான் பத்திரிகையாளர்

கடந்த 2005 ஆம் ஆண்டு பஞ்சாப்பில் ஜலந்தர் பிரஸ் கிளப் தொடக்க விழாவில், கேப்டன் அமரிந்தர் சிங் பின்னால் அமர்ந்திருந்த அரூசா ஆலம் பேசும்பொருளாக மாறினார். அவரது தோற்றம் மற்றும் அமரிந்தருவருக்கு தெரிந்தவர் என்பதால், ஊடகங்கள் மூலம் எளிதாக வெளிச்சத்திற்கு வந்தார். அன்று முதல் அமரிந்தரின் நல்ல நண்பராக இருந்த அரூசா ஆலம், தற்போது பஞ்சாப்பில் நிலவும் அரசியல் குழப்பத்தில் சிக்கிக்கொண்டார்.

பஞ்சாப் துணை முதல்வர் சுக்ஜிந்தர் ரந்தாவா கூறுகையில், “பாகிஸ்தானின் பாதுகாப்பு பத்திரிக்கையாளரான அரூசா ஆலம் மூலம் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் ஐஎஸ்ஐ உடனான தொடர்புகள் குறித்து பஞ்சாப் அரசு விசாரணை நடத்தும்” என தெரிவித்தார். இதை அரூசா முற்றிலும் மறுத்துவிட்டார்.

பிரஸ் கிளப்பில் அமரிந்தருடன் அறிமுகமான நாள் முதல், அரூசா அவருடன் சமூக பங்கு ஆற்ற தொடங்கினார்.

அமரிந்தர் பதவியில் இல்லாத காலத்திலும், மீண்டும் 2017இல் பதவிக்கு வந்துபோதும், அரூசா பாகிஸ்தான் போவதாகவும் வருவதாகவும் இருந்தார். காலப்போக்கில், அவர் மீதான ஊடகங்கள், அரசியல் வாதிகள் வெளிச்சம் குறைய தொடங்கியது.

பிப்ரவரி 2017 இல் சண்டிகரில் உள்ள ஒரு ஹோட்டலில் அமரீந்தரின் வாழ்க்கை வரலாற்றை வெளியீடும் விழாவில் அவர் இடம்பெற்றார். அதே போல, அமரிந்தர் பதவியேற்பு விழாவில் விவிஐபி அமரும் இடத்தில் அவருக்கு இருக்கை வழங்கப்பட்டது. இருப்பினும், அவரை பற்றி பேசுவது வெகுவாக குறைய தொடங்கியது.

2020 பாதியில் அவர் கடைசியாக பாகிஸ்தான் செல்வது வரை, காங்கிரஸ் அரசியல்வாதிகள் மத்தியில் அரூசாவுக்கு கடும் செல்வாக்கு இருந்தது. ஒருத்தர், அரூசாவின் காலை தொட்டு வணங்கிய சம்பவங்களும் இருந்துள்ளது.

அரூசாவின் நண்பர் ஒருவர் கூறுகையில், “முதலமைச்சர் வீட்டிற்கு வரும் அமைச்சர்கள், அதிகாரிகள், இறுதியாக அரூசாவுக்கு குட் நைட் சொல்வது மட்டுமின்றி அவர் வளர்க்கும் செல்லப்பிராணிக்கு பாய் சொல்வதை பழக்கமாக வைத்திருந்தனர்” என்றார்.

இத்தகைய அரூசாவின் செல்வாக்கு, கடந்த வாரம் துணை முதல்வரின் குற்றச்சாட்டால் முற்றிலுமாக சரிந்தது. அவர் ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர் என முத்திரை குத்தப்பட்டுள்ளது. அமரிந்தர் பதவியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்துடன் பேசிய அரூசா, “காங்கிரஸ்காரர்கள் அனைவரும் நரிக்கூட்டத்தை போன்றவர்கள். என்ன ஐஎஸ் அமைப்புடன் இணைக்கிறார்கள். அப்போ, எனக்கு விசா வழங்கிய அதிகாரிகளும் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்களா” என கேள்வி எழுப்பினார்.

பாகிஸ்தான் பத்திரிகையாளரான அரூசா அலம் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையே அமைதி நிலவிட விரும்பியவர் என்றும் அமரிந்தர் சிங்குனான அவருடைய அழகான புனிதமான நட்பை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேசுபொருளாக மாற்றியுள்ளனர் என்றும் மனுராஜ் கிரிவால் சர்மா தெரிவித்துள்ளார்.

அமரிந்தரின் குடும்பத்தினர், அரூசாவுடனான உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், முன்பு எங்கள் தளத்துடன் அமரிந்தரின் குடும்பத்துடன் அன்பான உறவைப் பகிர்ந்து கொண்டதாக அரூசா, “நான் இந்தியாவில் இருக்கும் போதெல்லாம், அமரிந்தரை மட்டுமல்லாது, அவரது குடும்பத்தினரையும் சந்திப்பேன்” என்றார்.

இருவருக்கும் இடையிலான நட்புறவை பலரும் கூறிய நிலையில், தற்போதைய குற்றச்சாட்டால் இருவரும் அதனை தெளிவுபடுத்துவதில் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

மறைந்த பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களுடன் அரூசா இருக்கும் படங்களை வெளியிட்ட ஃபேஸ்புக்கில் பதிவிட்ட அமரீந்தர், “எனக்கு மார்ச் மாதத்தில் 80 வயதாக போகிறது. ஆலமுக்கு அடுத்தாண்டு 69 வயதாக போகிறது. உங்களின் குறுகிய மனப்பான்மை பேச்சில் தெரிகிறது” என்றார்.

இதுகுறித்து பேசிய அரூஸா ஆலம், “நான் அவரை முதன்முதலில் சந்தித்தபோது எனக்கு வயது 50க்கு மேல், அவருக்கு வயது 60க்கு மேல் இருக்கும். எங்கள் உறவை, காதலாக சித்தரித்து பேசுவது தவறு. நாங்கள் அழகான நட்பை கொண்டிருந்தோம்” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Pakistani journalist aroosa alam friend of captain amarinder singh

Best of Express