/tamil-ie/media/media_files/uploads/2023/07/pak-woman.jpg)
கிரேட்டர் நொய்டாவில் கைதுசெய்யப்பட்ட பாகிஸ்தான் பெண்
தேசிய தலைநகர் டெல்லி அருகில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சட்டத்துக்கு புறம்பாக வசித்துவந்துள்ளார்.
இவர் யூ-ட்யூப்பில் இந்தியாவுக்குள் நுழைவது எப்படி என்று தேடியுள்ளார் என கௌதம புத்தர் நகர் காவலர்கள் தெரிவித்தனர்.
தற்போது போலீஸ் பிடியில் உள்ள பெண்ணின் பெயர் சீமா ஆவார். இவர், சமூக வலைதளம் மூலமாக கிரேட்டர் நொய்டாவில் வசிக்கும் சச்சின் சிங் என்பவருடன் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டு இங்கு வந்துள்ளார்.
அவரிடம் போலீசார் தொடர்ச்சியாக விசாரணை நடத்திவருகின்றனர். இது குறித்து, கிரேட்டர் நொய்டா துணை போலீஸ் கமிஷனர் சாத் மியா கான் கூறுகையில், “சீமாவுக்கும் அவரது கணவருக்கும் இடையேயான உறவு சரியாக இல்லை.
இதற்கிடையில், அவர் 2019-20 இல் சச்சினுடன் நெருக்கமாகிவிட்டார். அவரது திருமண பதிவு சான்றிதழ்கள், பாகிஸ்தான் பாஸ்போர்ட் மற்றும் குடியுரிமை அட்டைகளை மீட்டுள்ளோம்.
இந்தியா வருவதற்காக தனது நிலத்தை சுமார் 12 லட்ச ரூபாய்க்கு விற்றதாக அந்த பெண் கூறினார். அதில் தன் சேமிப்பில் சிலவற்றையும் செலவழித்துள்ளார்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.