kerala news in tamil: நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்புடைய இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனையடுத்து கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து வழக்கமாக கேரளாவுக்கு இயக்கப்படும் 30-க்கும் மேற்பட்ட தமிழக பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதே போல கேரளாவில் இருந்து கோவைக்கு பெரும்பாலான கேரள மாநில அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஒரு சில கேரள பேருந்துகள் மட்டுமே கோவைக்கு இயக்கப்படுகிறது. இந்த தீடீர் பந்த் காரணமாக தினமும் கேரளா சென்று வரும் பொது மக்களும், அரசு ஊழியர்களும் சிரமத்திற்குள்ளாகினர்.
கோவையிலிருந்து கேரள எல்லையான வாளையார் வரை நகர பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகிறது. கேரளா செல்பவர்கள் வாளையார் வரை சென்று பின்னர் அங்கிருந்து ஆட்டோ, ஜீப் மூலம் கேரளாவுக்குள் சென்று வருகின்றனர். மாநில எல்லைகளில் வழக்கம் போல கடைகள் திறக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தடைப்பட்டதன் காரணமாக பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
இந்நிலையில், கேராவில் இருந்து பாலக்காடு பகுதிக்கு இயக்கப்பட்ட சில கேரளா அரசு பேருந்துகள் மீது கல் வீச்சு நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் சில பேருந்துகளின் கண்ணாடிகள் முழுதுவமாக உடைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கேரளாவில் கல் வீச்சுக்கு பயந்து பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிந்து வாகனத்தை ஓட்டி வருகின்றனர். இதில் ஒரு பேருந்து ஓட்டுநர் ஹெல்மெட் அணிந்து வாகனம் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவில் நடைபெற்று வரும் பந்த் மற்றும் பல்வேறு பகுதிகளில் பேருந்தின் மீது நடைபெற்ற கல்வீச்சு சம்பவம் குறித்து அம்மாநில போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#InPics || கேரளா அரசு பஸ்கள் உடைப்பு; போலீசார் விசாரணை!https://t.co/gkgoZMIuaK | #Palakkad | #bus | #Kerala pic.twitter.com/Unw1jj0klk
— Indian Express Tamil (@IeTamil) September 23, 2022
#WATCH || வீடியோ: கேரளா அரசு பஸ்கள் உடைப்பு!https://t.co/gkgoZMIuaK | #Palakkad | #bus | #Kerala pic.twitter.com/Wz31KNxVWF
— Indian Express Tamil (@IeTamil) September 23, 2022
#WATCH || பாலக்காடு: அரசு பஸ்கள் உடைப்பு; ஹெல்மெட் அணிந்து ஓட்டும் டிரைவர்கள்!https://t.co/gkgoZMIuaK | #Palakkad | #bus | 📹 @rahman14331 pic.twitter.com/0efy8Fo15v
— Indian Express Tamil (@IeTamil) September 23, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.