Advertisment

'பாடப்புத்தகத்தில் இருந்து எங்கள் பெயர்களை நீக்குங்கள்': என்.சி.இ.ஆர்.டி.-க்கு பால்ஷிகர் யோகேந்திரா கடிதம்!

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில், அயோத்தி சர்ச்சை தொடர்பான பகுதியை சீரமைப்பது உட்பட, திருத்தப்பட்டதன் பின்னணியில் அவர்களது கடிதம் வந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Palshikar Yogendra write to NCERT chief Well sue if you dont remove our names from textbook

அரசியல் நிபுணர்கள் சுஹாஸ் பால்ஷிகர் (இடது) மற்றும் யோகேந்திர யாதவ் (வலது)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான அரசியல் அறிவியல் பாடப்புத்தகங்களுக்கான முன்னாள் தலைமை ஆலோசகர்களான சுஹாஸ் பால்ஷிகர் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் தங்களது பெயர்களை பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கத் தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலை (என்சிஇஆர்டி) கேட்டுக்கொண்டுள்ளனர்.
திங்களன்று என்.சி.இ.ஆர்.டி (NCERT) தலைவர் டி.பி சக்லானிக்கு அனுப்பிய கடிதத்தில், யாதவ் மற்றும் பால்ஷிகர் ஆகியோர் பாடப்புத்தகங்களின் தற்போதைய வடிவில் இருந்து தங்களை பகிரங்கமாக பிரித்ததாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும் தங்கள் பெயர்களை நீக்குமாறு சக்லானியிடம் கேட்டுக் கொண்டனர் கவுன்சில் மீண்டும் பாடப்புத்தகங்களை மேலும் திருத்தங்களுடன் மறுபதிப்பு செய்தது, அதே சமயம் அவர்களை தலைமை ஆலோசகர்களாக அடையாளம் காட்டியது.
12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகங்களின் திருத்தப்பட்ட பதிப்பில் அயோத்தி சர்ச்சையில் துண்டிக்கப்பட்ட பகுதி இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் முதன்முதலில் அறிவித்தபடி, கடந்த வாரம் வந்த திருத்தப்பட்ட பாடப்புத்தகத்தில் பாபர் மசூதியின் பெயரைக் குறிப்பிடவில்லை, அதை "மூன்று குவிமாடம் கொண்ட அமைப்பு" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முந்தைய பதிப்பில் இருந்து விவரங்களை நீக்கியுள்ளது. குஜராத்தில் சோம்நாத்தில் இருந்து அயோத்தி வரை பாஜக ரத யாத்திரை உட்பட; கரசேவகர்கள் பங்கு; டிசம்பர் 6, 1992 இல் பாபர் மசூதி இடிப்புக்குப் பின் நடந்த வகுப்புவாத வன்முறை; பாஜக ஆளும் மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி உள்ளிட்டவை இடம் பெறவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட நீக்குதல்களின் முந்தைய நடைமுறையைத் தவிர, அசல் பாடப்புத்தகங்களின் உணர்வோடு ஒத்திசையாத குறிப்பிடத்தக்க சேர்த்தல்கள் உள்ளன எனவும் இவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதில், “எங்களில் யாரையும் கலந்தாலோசிக்காமல் இந்தப் பாடப்புத்தகங்களைத் திரித்து வெளியிடுவதற்கு என்.சி.இ.ஆர்.டி க்கு தார்மீக அல்லது சட்ட உரிமை இல்லை. நாங்கள் வெளிப்படையாக மறுத்த போதிலும் இவை எங்கள் பெயர்களில் உள்ளன” எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், “என்.சி.இ.ஆர்.டி உடனடி திருத்த நடவடிக்கை எடுக்கத் தவறினால், நாங்கள் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் வாசிக்க : Palshikar, Yogendra write to NCERT chief: We’ll sue if you don’t remove our names from textbook

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Education
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment