பான் (PAN) எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வருமான வரி செலுத்துவோர் அனைவருக்கும் பான் எனப்படும் நிரந்தர கணக்கு எண் வழங்கப்படுகிறது. இதில் போலியான பான் கார்டுகளை ஒழிக்கும் வகையில், மத்திய அரசு வருமானவரி சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. 2017-ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்த சட்டத்தின்படி, பான் கார்டுகளுடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிடப்பட்டது.
எனினும் இதில் பல நடைமுறை சிக்கல்கள் எழுந்ததால், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்ட கால அவகாசம், நேற்றுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கான காலகெடுவை அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரி வருவாய் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதேபோன்று, ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.