/tamil-ie/media/media_files/uploads/2019/07/template-72.jpg)
pan card, aadhaar card, income tax return, union budget 2019, nirmala sitharaman, non resident Indians, பான் கார்டு, ஆதார் கார்டு, வருமான வரி தாக்கல், மத்திய பட்ஜெட் 2019, நிர்மலா சீதாராமன், வெளிநாடு வாழ் இந்தியர்கள்
என்ன தலைப்பை பார்த்தால் குழப்பமாக இருக்கிறதா? ஒருவேள தப்பா செய்தியை போட்டுட்டாங்களோ என்று நினைக்கத் தோணுதா...இல்லைங்க. இது சரியான செய்திதான்!!!
வருமான வரி தாக்கல் செய்ய பான் கார்டு முக்கியம். அதேபோல், வங்கிகளில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் செலுத்தினால், பான் எண் தருவது கட்டாயம் என்றநிலையில், ஆதார் எண்ணை கொண்டும் வருமான வரி செலுத்தலாம் என்ற புதிய திட்டம், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2019 -2020ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, வருமான வரி தாக்கல் செய்வதற்கு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை பயன்படுத்திக்கொள்ளலாம். பான் கார்டு இல்லாதவர்கள், ஆதார் எண்ணை வைத்தே வருமான வரி தாக்கலை எளிதாக செய்யலாம்.
இந்தியாவில் 120 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. , வருமான வரி தாக்கல் செய்வதற்கு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை பயன்படுத்திக்கொள்ளலாம். பான் கார்டு இல்லாதவர்கள், அது தேவைப்படும் இடங்களில், ஆதார் எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அவர் கூறினார்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஆதார் கார்டு : இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியா வந்தபிறகு, அவர்கள் ஆதார் எண் பெற குறைந்தது 180 நாட்கள் காத்து இருக்கவேண்டிய நிலை இருந்தது. இம்முறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் இந்தியா வந்தவுடனே, ஆதார் எண் தருவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட உள்ளதாக அவர் கூறினார்.
2019, மே 31 நிலவரப்படி, இந்தியாவில் 123.82 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளதாக UIDAI அமைப்பு தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.