பான் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? இதோ உங்களுக்கான கட்டண விவரம்..

PAN Charges levied by NSDL for online application: பான் கார்டு விண்ணப்பிக்கும் முறை அதற்கான கட்டணம் எவ்வளவு என்று இதோ உங்களுக்காக தருகிறோம்.

pan card fees, pan card application charges, PAN card charges, PAN Card Online, PAN card rules, பான் கார்டு கட்டணம், pan application online, PAN Card Online Application, பான் கார்ட் ஆன்லைன் கட்டணம், permanent account number
pan card fees, pan card application charges, PAN card charges, PAN Card Online, PAN card rules, பான் கார்டு கட்டணம், pan application online, PAN Card Online Application, பான் கார்ட் ஆன்லைன் கட்டணம், permanent account number

Permanent Account Number PAN Card Charges For Online Application: பான் கார்டு விண்ணப்பிக்கும் முறை மற்றும் அதற்கான கட்டணம் எவ்வளவு இருக்கும் என்று தெரியாமல் இருக்கிறீர்களா கவலையை விடுங்கள். பான் கார்டு விண்ணப்பிப்பம் செய்வதற்கான கட்டணம் எவ்வளவு என்று இதோ உங்களுக்காக தருகிறோம்.

நிரந்தர கணக்கு எண் என்பதுதான் பான் எண். இது வருமானவரித் துறையால் வழங்கப்படும் 10 இலக்க அடையாள எண். நீங்கள் ஹோட்டலில் ரூ.50-க்கு மேல் நீங்கள் பணம் செலுத்த வேண்டுமானால் அல்லது இருசக்கர வாகனத்தை தவிர வேறு ஏதேனும் வாகனங்கள் வாங்க வேண்டுமானால், கண்டிப்பாக பான் எண் குறிப்பிட வேண்டும். அதனால், அனைவரும் பான் எண் வைத்திருப்பது பணம் செலுத்தும்போது உதவியாக இருக்கும். இந்த பான் கார்டைப் பெற நீங்கள் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.

இந்த பான் எண்ணை பெறுவதற்கு தேசிய பத்திரங்கள் வைப்புத்தொகை லிமிடெட் (என்.எஸ்.டி.எல்) மற்றும் யு.டி.ஐ உள்கட்டமைப்பு தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் லிமிடெட் (யு.டி.ஐ.டி.எஸ்.எல்) ஆகிவற்றின் வலைதளங்களுக்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஒரு பான் கார்டு விண்ணப்பம் செய்வதற்கும் என்.எஸ்.டி.எல் ரூ. 56 மற்றும் ரூ.862 (வரிகள் இல்லாமல்) வசூலிக்கிறது என்று டின் என்.எஸ்.டி.எல் டாட் காம் இ கவர்னன்ஸ் இணையதளம் குறிப்பிடுகிறது. இதற்கான கட்டணம்.

பான் கார்டு விண்னப்பம் செய்பவருக்கு அவருடைய இந்திய முகவரிக்கு பான் அட்டை அனுப்பி வைக்க வேண்டுமானால் வரி உள்பட ரூ.107 கட்டணமாக செலுத்த வேண்டும். அதுவே இந்தியாவுக்கு வெளியே என்றால் ரூ.1,017 கட்டணமாக செலுத்த வேண்டும்.

அதே போல பான் கார்டு விண்ணப்பம் செய்பவருக்கு அவருடைய மின்னஞ்சல் முகவரிக்கு இ பான் கார்டு அனுப்ப வரிகள் ரூ.72 வசூலிக்கப்படுகிறது.

இதைவிட இன்னொரு விஷயம் என்ன தெரியுமா? யாராவது ஒருவர் சட்ட விரோதமாக ஒன்றுக்கு மேல் பான் கார்டு வாங்கியிருப்பது தெரிய வந்தால் அவருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pan card online application pan card charges permanent account number

Next Story
பாகிஸ்தான் ராணுவம் 5 முறை தாக்குதல்.. போஃபர்ஸ் பீரங்கி துப்பாக்கிகளால் பதிலடி கொடுத்த இந்தியா..Pakistan army attempts, Pakistan border action team, south of pir panjal, Indian army, retaliatory response, பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல், பாகிஸ்தான் எல்லை நடவடிக்கை குழு, இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல், Bofors, bofors artillery guns, terrorist attacks
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com