பனாமா பேப்பர்ஸ்: அறிவிக்கப்படாத சொத்துக்களில் அடையாளம் காணப்பட்ட ரூ.20,000 கோடி
பனாமா பேப்பர்கள் வெளியாகி ஐந்து ஆண்டுகளை கடந்த நிலையில், உலகெங்கிலும் உள்ள வரி அதிகாரிகள் 1.36 பில்லியன் டாலர்களுக்கும் அதிமான பணத்தை அபராதம் மற்றும் வரியாக பெற்றுள்ளனர் என்று ஐ.சி.ஐ.ஜே. கூறியுள்ளது.
Panama Papers : உலகின் பணக்கார, சக்தி வாய்ந்த நபர்கள் எவ்வாறு தங்களின் பணத்தை வரி செலுத்தாமல் நகர்த்துகின்றனர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது புலிட்சர் விருது பெற்ற பனாமா பேப்பர்ஸ் விசாரணை கட்டுரைகள். இந்த விசாரணை இதுவரை 20,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அறிவிக்கப்படாத சொத்துக்களை அடையாளம் காண இட்டுச் சென்றுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) கோரிக்கைகளுக்கு பதிலளித்த மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி), 2021 ஜூன் வரை, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மொத்தம் ரூ .20,078 கோடி அறிவிக்கப்படாத சொத்துக்கள் விசாரணையைத் தொடர்ந்து அடையாளம் காணப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பனாமா பேப்பர்ஸ் விசாரணையில் முக்கிய பங்காற்றியது. இது பனமேனிய சட்ட நிறுவனமான மொசாக் பொன்சேகாவிடமிருந்து (Mossack Fonseca) பெறப்பட்ட சுமார் 11.5 மில்லியன் ரகசிய ஆவணங்களிலிருந்து பெறப்பட்ட வெளிநாட்டு ஹோல்டிங்கில் கவனம் செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Advertisements
விசாரணையின் கண்டுபிடிப்புகள், சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பு (ஐ.சி.ஐ.ஜே) மற்றும் 100 ஊடக பங்காளர்களை உள்ளடக்கியது, இந்தியாவில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த செய்திகளை ஏப்ரல் 2016-ல் வெளியிட்டது.
ஆர்.டி.ஐ. மூலமாக சி.பி.டி.டியிடம் இருந்து பெறப்பட்ட தரவுகள் படி மதிப்புகள் அதிகமாக இருக்கிறது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ. 1,088 கோடியாக இருந்த மதிப்பு ஜூன் 2019ல் 1564 கோடியாக உள்ளது.
இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் பட்டியலிட்டுள்ளது சி.பி.டி.டி. கடந்த மாதம் வரை, கறுப்புப் பணம் சட்டம் மற்றும் வருமான வரிச் சட்டத்தின் கீழ் பல்வேறு நீதிமன்றங்களில் 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 83 வழக்குகளில், தேடல்கள் மற்றும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளுக்கு வரி விதித்தலையும் தொடங்கியுள்ளது என்பதை சிபிடிடி வெளிப்படுத்தியுள்ளது. ஆர்.டி.ஐ வழங்கிய பதிலில் சி.பி.டி.டி. ரூ. 142 கோடி மதிப்பிலான வரியை, குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. வருகின்ற நாட்களில், நீதிமன்ற விசாரணையின் போது இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பனாமா பேப்பர்கள் வெளியாகி ஐந்து ஆண்டுகளை கடந்த நிலையில், உலகெங்கிலும் உள்ள வரி அதிகாரிகள் 1.36 பில்லியன் டாலர்களுக்கும் அதிமான பணத்தை அபராதம் மற்றும் வரியாக பெற்றுள்ளனர் என்று ஐ.சி.ஐ.ஜே. கூறியுள்ளது. இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெய்ன், ஃப்ரான்ஸ் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் இந்த வசூல் மிகவும் அதிமாக இருந்தது என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil