யாரையும் சார்ந்திராமல் வாழப் பழக வேண்டும்: மோடி சொல்லும் கொரோனா பாடம்

கொரோனாவுக்கு எதிரான போரில் கிராமங்களும், கிராமப்பஞ்சாயத்துகளும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

Panchayati raj day 2020 we have to be more self reliant says Prime Minister Narendra Modi : கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகின்ற காரணத்தால் இந்தியாவில் கடந்த மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. ஒரு மாதத்தை ஊரடங்கு தொட்ட நிலையில் இந்தியாவில் கொரோனாவால் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 718 பேர் உயிரிழந்தனர்.

பிரதமர் மோடி கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் என பலரிடமும் பேசி வருகிறார். இந்நிலையில் இன்று பஞ்சாயத்து ராஜ் தினத்தை ஒட்டி இ-கிராம ஸ்வராஜ் என்ற இணையதள போர்ட்டலை திறந்து வைத்து, ஸ்வாமித்வா திட்டத்தையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது நாடு முழுவதிலும் உள்ள கிராமப் பஞ்சாயத்து தலைவர்களிடமும் காணொலி காட்சி மூலம் அவர் பேசினார். அப்போது அவர் ”யாரையும் சார்ந்து இல்லாமல், சுயசார்புள்ளவர்களாக நாம் எதிர்காலத்தில் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்பதையே கொரோனா நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது என்று கூறினார்.

மேலும் படிக்க :  ஊரடங்கு நேரத்தில் ரகசிய பயணம்: நிரூபிக்க தயாரா? என பிரசாந்த் கிஷோர் சவால்

இந்தியாவில் குறைவான வளங்கள் இருந்த போதிலும், கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் சவால்களை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். கொரோனாவுக்கு எதிரான போரில் கிராமங்களும், கிராமப்பஞ்சாயத்துகளும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கிராமப்புறங்களிலும் ஊரடங்கு மற்றும் தனிமனித விலகலை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Panchayati raj day 2020 we have to be more self reliant says prime minister narendra modi

Next Story
ஊரடங்கு நேரத்தில் ரகசிய பயணம்: நிரூபிக்க தயாரா? என பிரசாந்த் கிஷோர் சவால்prashant kishor, lockdown, Bihar BJP, prashant kishor mamata banerjee, indian express
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express