Pandora Papers Nirav Modi: ஜனவரி 2018ம் ஆண்டு வைர வியாபாரி மற்றும் நிதி மோசடி குற்றவாளியான நீரவ் மோடி இந்தியாவில் இருந்து தப்பி ஓடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அவருடைய சகோதரி புர்வி மோடி பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் நிறுவனத்தை நிறுவி, சிங்கப்பூரின் ட்ரைடென்ட் டிரஸ்ட் நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு அறக்கட்டளையின் நிறுவன பாதுகாவலராக செயல்பட்டார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மேற்கொண்ட ஆய்வில், ப்ரூக்டன் மேனேஜ்மெண்ட் லிமிட்டட் என்று அழைக்கப்படும் அந்த நிறுவனம் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம், டெபாசிட் டிரஸ்டின் கார்ப்பரேட் பாதுகாவலராக செயல்பட நிறுவப்பட்டது என்பது தெரியவந்தது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலிக் கடிதங்கள் மூலம் மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட நிறுவனமான ஃபையர்ஸ்டார் நிறுவனத்தின் கிரேயேடிவ் இயக்குநராக பணியாற்றிய போது கிடைத்த சம்பளம் மற்றும் வருமானத்தை ப்ரூக்டன் நிறுவனத்தில் முதலீடாக செலுத்துவதாக புர்வி, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் நிறுவனங்கள் துவங்குவதற்கான ஒருங்கிணைப்பு படிவத்தில் கூறியுள்ளார்.
இந்த புதிய நிறுவனம் மற்றும் அறக்கட்டளைக்கான ஆவணங்களும் பண்டோரா பேப்பர்களில் இடம் பெற்றுள்ளது. நீரவ் மோடி அவரது உறவினர் ஆகியோர் பெயரில் அமலாக்கத்துறை தொடுத்த நிதி மோசடி வழக்கில் புர்வியும் குற்றவாளியாக இணைக்கப்பட்டிருந்தார். தற்போது அப்ரூவராக மாறியுள்ள அவருக்கு முழு மற்றும் உண்மையான வெளிப்பாட்டின் நிபந்தனையின் பேரில் நீதிமன்றம் மன்னிப்பு வழங்கியதால் வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது.
பெல்ஜியன் நாட்டு பிரஜையான நீரவ் மோடியின் சகோதரி புர்விக்கு எதிராக சர்வதேச காவல்துறையான இண்டெர்போல் சிவப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
புர்வி மோடியின் வழக்கறிஞர் மனவேந்திர மிஷ்ரா இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு மின்னஞ்சல் மூலம் பதில் அளித்தார். அதில், புர்வி மோடிக்காக இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வழக்கறிஞர்கள் நாங்கள். உங்கள் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருக்கும் குற்றச்சாட்டினை நாங்கள் நிராகரிக்கின்றோம். நிதி மோசடி தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதால் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கருத்துகள் கூற விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் $1.3 பில்லியன் மதிப்பு சொத்துகள்; திவாலான அனில் அம்பானி மறைத்தது என்ன?
புர்வியும் அவரது சகோதரர் நீஷல் மோடியும் மூன்று பி.வி.ஐ. நிறுவனங்களான இன்டெக்ரேட்டட் இன்வெஸ்டிங் லிமிட்டட், எக்ஸ்க்ளூசிவ் கன்சல்டண்ட் லிமிட்டட், மற்றும் பனேரா அசெட்ஸ் இன்க் என்ற மூன்று நிறுவனங்களின் உரிமையாளர்களாக உள்ளனர். இந்த மூன்று நிறுவனங்களும் பண மோசடிக்கு நீரவ் மோடியால் பயன்படுத்தப்பட்டது என்று அமலாக்கத்துறை கூறியுள்ளது.
ட்ரிடெண்ட் அறக்கட்டளையின் ஆவணங்கள் படி, 2012ம் ஆண்டு இண்டெக்ரேடட் இன்வெஸ்டிங் துபாயில் டையாஜெம்ஸ் FZC என்ற கிளையை துவங்கியது. அதே போன்று எக்ஸ்க்ளூசிவ் கன்சல்டன்ட்ஸ் லிமிட்டட், ஜனவரி 2012ம் ஆண்டில் யுனிவெர்சல் ஃபைன் ஜுவல்லரி FZE என்ற நிறுவனத்தை துவங்கியது. அமலாக்கத்துறை இந்த இரண்டு நிறுவனங்களையும் “டம்மி நிறுவனங்கள்” என்று 265 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியை புர்விக்கு திருப்ப பயன்படுத்தப்பட்டது என்றும் கூறியுள்ளது.
டிரிடன்ட் டிரஸ்ட் சிங்கப்பூர் நிர்வகிக்கும் மான்டி கிறிஸ்டோ டிரஸ்டின் உரிமையாளர் என்று ஆவணங்கள் காட்டுகின்றன.
2013ம் ஆண்டு, இந்த அறக்கட்டளை, பெல்வெதெரே ஹோல்டிங்ஸ் குரூப் லிமிட்டட் என்ற நிறூவனத்தை துவங்கியுள்ளது என்றும் ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 6.25 மில்லியன் யூரோக்கள் கொண்டு லண்டனில், பெல்வெதெரே ஹோல்டிங்க்ஸ் குரூப் சொத்து ஒன்றை வாங்கியுள்ளது என்று 2017ம் ஆண்டு அமலாக்கத்துறை குற்றம் சுமத்தியது. புர்விக்கு சொந்தமான இந்த சொத்து அமலாக்கத்துறையால், வங்கி மோசடி செய்யும் போது நிரவ் மோடியால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றத்தின் வருமானத்தின் ஒரு பகுதி என்று கூறி பட்டியலிட்டுள்ளது.
பஞ்சாப் தேசிய வங்கி மோசடி தொடர்பாக வெளியே தெரிவதற்கு முன்பு, 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரம் நீரவ் மோடி இந்தியாவில் இருந்து வெளியேறினார். 2019ம் ஆண்டு மார்ச் மாதம் நீரவ் மோடி இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் லண்டனில் உள்ள வான்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கீழ் நீதிமன்றத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்று அறிவிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனு முழுமையாக விசாரிக்கப்படுமா என்ற கேள்வியுடன் புதிய மேல்முறையீட்டு விண்ணப்பத்துடன் நீரவ் மோடி இங்கிலாந்தின் உயர் நீதிமன்றத்தை ஒரு வாய்வழி விசாரணைக்கான நாடினார்.
ஏப்ரல் மாதத்தில், இங்கிலாந்து அரசு நீரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்து செல்ல ஒப்புதழ் வழங்கியது. இதற்கு முன்பு பிப்ரவரி மாதம் 25ம் தேதி அன்று இங்கிலாந்து நீதிமன்றம் நீரவ் மோடி நாடு கடத்தப்படுவதற்கான உத்தரவை பிறப்பித்தது. குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட அவருக்கு எதிரான ஆதாரம் போதுமானதாக இருந்தது.
ஜூலை 1 ம் தேதி, நிரவ் மோடியால் திறக்கப்பட்ட இங்கிலாந்தில் உள்ள புர்வியின் கணக்கிலிருந்து ரூ .17.25 கோடியை மீட்டதாக அமலாக்கத்துறை அறிவித்தது. புர்வி இந்த கணக்கு தொடர்பாக விவரங்களை அளித்த பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அமலாக்கத்துறை கூறியது. இதுவரை, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மோடிக்கு சொந்தமான ரூ .2,400 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.