சர்ச்சைக்குரிய அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்களின் பெயர்கள் அவர்களின் வெளிநாட்டு நெட்வொர்க்குகள் மற்றும் பணப்புழக்கங்கள் காரணமாக பண்டோரா பேப்பர்ஸில் இடம்பெற்றுள்ளன, இது தி இந்தியன் எக்ஸ்பிரஸின் விசாரணை பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வருமான கமல்நாத்தின் என்ஆர்ஐ மகன் பாகுல் நாத் முதல், குற்றம் சாட்டப்பட்ட ராஜீவ் சக்சேனா வரை, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பல குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்த அகஸ்டா ஊழல் வழக்கில் இந்தப் பதிவுகள் புதிய ஆதாரங்களை அளிக்கின்றன.
பாகுல் நாத்: தற்போது ஜாமீனில் இருக்கும் ராஜீவ் சக்சேனாவின் விசாரணை அறிக்கையில் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது. டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் கவுதம் கெய்தனுடன் சக்ஸேனா உடந்தையாக இருந்து, அகஸ்டாவெஸ்ட்லேண்டிலிருந்து இன்டர்ஸ்டெல்லர் டெக்னாலஜிஸ் கணக்கில் 12.40 மில்லியன் யூரோ பெற்றதாக வழக்கு பதிவுகள் காட்டுகின்றன. இந்த மோசடி பணம் மூலம் மற்ற இடைத்தரகர்கள் மற்றும் பொது ஊழியர்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
2000 ஆண்டுவாக்கில், சக்ஸேனா இன்டர்ஸ்டெல்லர் டெக்னாலஜிஸின் 99.9% பங்குகளை எடுத்துக்கொண்டார்.
அவரது விசாரணையின் போது (நவம்பர் 2020 இல் தி இந்தியன் எக்ஸ்பிரஸில் பதிவாகியுள்ளது), "நாங்கள் (அவரும் இணை குற்றம் சாட்டப்பட்ட சுஷேன் மோகன் குப்தாவும்) பிரிஸ்டைன் ரிவர் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் மூலம் இந்த நிதியைப் பெற்றோம். இந்த நிறுவனம் கமல்நாத்தின் மகன் பாகுல் நாத்க்காக ஜான் டோச்செர்டியால் நிர்வகிக்கப்படுகிறது. இன்டர்ஸ்டெல்லர் டெக்னாலஜிஸின் இந்த மறைமுகமாக நிதி பிரிஸ்டைன் ரிவர் இன்வெஸ்ட்மென்ட்டுக்கு கடன்களை திருப்பிச் செலுத்த பயன்படுத்தப்பட்டது, என்று சக்சேனா கூறினார்.
சுவிஸ் நாட்டைச் சேர்ந்த டோச்செர்டி, பாகுல் நாத்துடன் பிப்ரவரி 2018 இல் ட்ரைடென்ட் டிரஸ்டால் நிறுவப்பட்ட ஒரு வெளிநாட்டு நிறுவனம் வழியாக தொடர்புடையவர் என்பதை பண்டோரா பேப்பர்ஸ் பதிவுகள் காட்டுகிறது.
இந்த பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் நிறுவனமான ஸ்பெக்டர் கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட், டோச்செர்டியை அதன் முதல் இயக்குநராகவும் மற்றும் பாகுல் நாத்தை துபாய் முகவரியுடன் நன்மை பயக்கும் உரிமையாளராகவும் பெயரிடுகிறது.
மற்றொரு பிவிஐ நிறுவனமான செல்ப்ரூக் லிமிடெட், ஸ்பெக்டர் கன்சல்டன்சி சேவைகளின் பங்குதாரராக பட்டியலிடப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் தொழில் இந்த நிறுவனத்தின் "நோக்கம்" என்று பட்டியலிடப்பட்டுள்ளது. முதல் மூன்று ஆண்டுகளில் அதன் சொத்துக்கள் 10 மில்லியன் டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸின் கேள்விகளுக்கு பாகுல்நாத் பதிலளிக்கவில்லை.
ராஜீவ் சக்சேனா: அகஸ்டாவெஸ்ட்லேண்ட் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சக்சேனா 2014 ஆம் ஆண்டில் பிவிஐ -யில் உள்ள அதன் சொந்த நிறுவனமான தனாய் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் தனிப்பட்ட சொத்துக்களுக்காக ஒரு அறக்கட்டளையை நிறுவி, 14 பிற நிறுவனங்கள் அல்லது சொத்துகளின் பங்குகள் அல்லது உரிமையை அதனுடன் இணைக்கப்பட்டிருப்பதாக பதிவுகள் காட்டுகின்றன.
பாம் ஜுமைராவில் உள்ள அவரது வில்லாவின் பங்குகள், லண்டனில் ஒரு பிளாட், இரண்டு சொத்து நிறுவனங்கள் மற்றும் இரண்டு அலுவலகங்கள் ஆகியவை இதில் அடங்கும். தனாய் டிரஸ்ட், பெலிஸில் தனாய் ஹோல்டிங்ஸ் லிமிடெட் என்று அழைக்கப்படும் மற்றொரு அடிப்படை நிறுவனத்தைக் கொண்டுள்ளது, இது சூரிச்சில் உள்ள யூபிஎஸ் வங்கி மற்றும் கிரெடிட் சூயிஸ் உள்ளிட்ட வங்கிகளில் கணக்குகளைக் கொண்டுள்ளது.
மேலும், 2014 ஆம் ஆண்டில், சக்சேனாவின் வணிக அறக்கட்டளையான மேட்ரிக்ஸ் UAE அறக்கட்டளை, ஒரு வெளிநாட்டு நிறுவனமாக அமைக்கப்பட்டது மற்றும் அதன் "அடிப்படை" BVI நிறுவனம் மேட்ரிக்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் ஆகும். ராஜீவ் சக்சேனாவின் பல முதன்மை நிறுவனங்களின் பங்குகள் சில அகஸ்டாவெஸ்ட்லேண்ட் கிக் பேக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளன, அவை அறக்கட்டளைக்கு நிதியளிக்கும்.
2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்தம் இந்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் சென்னை விமான நிலையத்தில் ஷிவானி சக்சேனா கைது செய்யப்பட்டபோது சக்சேனாக்கள் முதலில் இந்த வழக்கில் இணைக்கப்பட்டனர்.
கைது செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன், ரகசிய மின்னஞ்சல்களில், ராஜீவ் சக்சேனா ட்ரைடென்ட் ட்ரஸ்டுக்கு "அவசரமாக" தனாய் ட்ரஸ்ட் மற்றும் மேட்ரிக்ஸ் யுஏஇ டிரஸ்ட் மற்றும் அவற்றின் பிவிஐ நிறுவனங்களின் கட்டமைப்புகளை கலைத்து, பங்குகளை தங்கள் செட்லரான ராஜீவ் சக்சேனாவுக்கு மாற்றுமாறு அறிவுறுத்தினார்.
மே 2016 இன் ஒரு மின்னஞ்சல் கூறியது: "வாடிக்கையாளர் இப்போது அறக்கட்டளைகளையும், அடிப்படை நிறுவனங்களையும் கலைக்க விரும்பகிறார், ஏனெனில் அவர்கள் இனி அவற்றை முறையாக கலைக்க விரும்பவில்லை ... அறக்கட்டளைகளை இந்த வழியில் நிறுத்த முடியாது என்று நாங்கள் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம், ஆனால் அவர்கள் அவர்களால் முடியும் என்று உறுதியாக உள்ளனர். இதே போன்ற ராஜிவ் சக்சேனா அறிவுறுத்தல்களால் 2014 ஆம் ஆண்டில் ட்ரைடென்ட் டிரஸ்ட் மூலம் இணைக்கப்பட்ட மற்றொரு பிவிஐ நிறுவனமான மவுண்ட்வுட் லிமிடெட் கலைக்கப்பட்டது.
இந்தியன் எக்ஸ்பிரஸின் கேள்விகளுக்கு ராஜீவ் சக்சேனா பதிலளிக்கவில்லை.
கவுதம் கைத்தான்: அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஒப்பந்தத்திற்காக போடப்பட்ட சிக்கலான பணமோசடி கட்டமைப்பிற்கு டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் கவுதமின் பங்கு முக்கியமானது. இவர், டிசம்பர் 2016 இல் முன்னாள் இந்திய விமானப்படை தளபதி எஸ்.பி.தியாகியுடன் கைது செய்யப்பட்டார். இப்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார்.
உணவு எண்ணெய்க்கான ஈராக் ஊழல் பற்றிய வோல்கர் அறிக்கையில் பெயரிடப்பட்ட லண்டனைச் சேர்ந்த உணவக உரிமையாளர் ஆதித்யா கண்ணா மற்றும் புது தில்லியில் உள்ள ஹயாத் ஹோட்டலின் உரிமையாளர் ராதே ஷ்யாம் சராஃப் மற்றும் காத்மாண்டுவில் உள்ள யாக் & எட்டி ஹோட்டல் ஆகியோருக்கு வெளிநாட்டு அறக்கட்டளைகளில் கவுதம் கைத்தான் பாதுகாவலராக செயல்பட்டதாக பதிவுகள் காட்டுகின்றன. அவர் சரஃப்க்காக அமைத்த அறக்கட்டளை வருணிஷா அறக்கட்டளை என அழைக்கப்படுகிறது.
ஆதித்யா கண்ணாவைப் பொறுத்தவரையில், கவுதம் கண்ணா பிவிஐ -யில் ட்ரைடென்ட் அறக்கட்டளையால் இணைக்கப்பட்ட கிளாசியர் அறக்கட்டளையின் "தொழில்முறை இடைத்தரகராக" தோன்றுகிறார். நிறுவனம், ஒரு சிக்கலான கட்டமைப்பின் மூலம், லண்டனில் உணவகங்களை வைத்திருக்கிறது. டாமரிண்ட் மற்றும் இம்லி ஆகியவை அந்த உணவங்களாகும்
கேள்விகளுக்கு பதிலளித்த கவுதம் கைதான், "நீங்கள் குறிப்பிட்டுள்ள எனது வாடிக்கையாளர்கள் இருவரும் பல தசாப்தங்களாக என்ஆர்ஐக்கள். நான் அவர்களுக்கு ஒரு தொழில்முறை இடைத்தரகராக இருந்தேன், நிறுவனங்கள் செயலில் உள்ளதா இல்லையா என்பதை அவர்களால் மட்டுமே சொல்ல முடியும் என்று கூறினார்.
ஆதித்யா கன்னா கூறினார்: "1983 முதல் என் வாழ்நாள் முழுவதும் நான் ஒரு என்ஆர்ஐ. 2012 இல் கிளாசியர் அறக்கட்டளையை அமைக்க ட்ரைடெண்டின் சேவைகளைப் பயன்படுத்தினேன். ஃபிரிட்டன் பிவிஐ -யில் பங்குகளை வைத்திருப்பதற்காக இந்த அறக்கட்டளை அமைக்கப்பட்டது, இது என் மறைந்த தந்தைக்கு சொந்தமான ஒரு நிறுவனமாகும், அவருடைய இங்கிலாந்து உணவு வியாபாரத்தில் நான் அவரிடமிருந்து பெற்ற பங்குகளை வைத்திருந்தேன். அறக்கட்டளையின் நிகர மதிப்பு, அந்த நேரத்தில் உணவகங்களின் மதிப்பை மையமாகக் கொண்டது, தோராயமாக $ 3.5 மில்லியன். 2013 ஆம் ஆண்டில் மூடப்பட்டப் பிறகு இந்த கட்டமைப்பை நான் உண்மையில் பயன்படுத்தவில்லை. அறக்கட்டளையை மூடுவது குறித்து இங்கிலாந்து வரி ஆணையம் அல்லது HMRC க்கு தெரியப்படுத்தப்பட்டது, மேலும் இந்திய அதிகாரிகளும் இதை அறிந்திருக்கிறார்கள்.
"நான் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு குடியுரிமை இல்லாத இந்தியனாக இருக்கிறேன். எனது செல்வத்தை திட்டமிடுவது தனிப்பட்ட மற்றும் தனியுரிமை விஷயம் என்பதை நீங்கள் புரிந்துகொள்வதை நான் பாராட்டுகிறேன் என ராதே ஷ்யாம் சராஃப் கூறினார்.
தேவ் மோகன் அல்லது சுஷாந்த் குப்தா: இந்தியாவில் பாதுகாப்பு வணிகத்தில் ஈடுபட்டுள்ள குடும்பங்களில் குப்தர்களும் அடங்குவர். அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்தத்தில், தேவ் மோகன் குப்தாவின் மகனான சுஷேன் மோகன் குப்தா குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர். அவர்களின் நிறுவனம், டெஃப்சிஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் மற்றும் ரஃபேல் ஒப்பந்தங்களில் பெயரிடப்பட்டது.
பண்டோரா பேப்பர்ஸ் பதிவுகள் 2005 ல், தேவ் மோகன் குப்தா லாங்கே அறக்கட்டளையை வரி புகலிடமான பெலிஸில் நிறுவினார் என்பதைக் காட்டுகிறது. பதிவுகளில் தேவ் மோகன் குப்தாவை செட்லர் மற்றும் அவரது மனைவி சுப்ரா குப்தா மற்றும் மகன் சுஷாந்த் மோகன் குப்தா ஆகியோர் முதல் மற்றும் இரண்டாவது பயனாளிகளாக பெயரிட்டுள்ளனர். சொத்துக்களின் மதிப்பில் குறிப்பிட்ட விவரங்கள் இல்லை. 2011 ஆம் ஆண்டில், தேவ் மோகன் குப்தா லாங்கே அறக்கட்டளையின் திரும்பப் பெறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
"இந்த விஷயத்தில் என் வாடிக்கையாளர்களுக்கு எந்த கருத்தும் இல்லை," என தேவ் மோகன் குப்தாவின் வழக்கறிஞர் நிர்விகர் சிங் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.