Advertisment

தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை: சுட்டிக்காட்டிய குழு: அறிக்கை தெளிவில்லை - கண்டறிந்த தெலங்கான அரசு

2022 ஜூன் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை முதல்வர் கே சந்திரசேகர் ராவ் தலைமையிலான அப்போதைய அரசு, அதை பொதுவில் வெளியிடவில்லை. மலையாளத் திரையுலகில் புயல் வீசியுள்ள நிலையில், அந்த அறிக்கை மீண்டும் கவனத்துக்கு வந்திருக்கிறது.

author-image
WebDesk
New Update
andhra sexual committee

மலையாளத் திரையுலகம் குறித்த ஹேமா கமிட்டி அறிக்கைக்குப் பிறகு, நடிகை சமந்தா ரூத் பிரபு உட்பட தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த பல பெண்கள் சமூக ஊடகங்களில் தெலங்கானா அரசு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று கோரியுள்ளனர். (File Photo)

2022 ஜூன் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை முதல்வர் கே சந்திரசேகர் ராவ் தலைமையிலான அப்போதைய அரசு,  அதை பொதுவில் வெளியிடவில்லை. மலையாளத் திரையுலகில் புயல் வீசியுள்ள நிலையில், அந்த அறிக்கை மீண்டும் கவனத்துக்கு வந்திருக்கிறது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Panel flagged sexual harassment in Telugu film industry too, but Telangana govt found it ‘vague’

2019 ஏப்ரலில் தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகளை விசாரிக்க தெலங்கானா அரசால் அமைக்கப்பட்ட துணைக் குழுவின் அறிக்கை கண்டறிந்தவைகளில் இதுவும் ஒன்று.

2022 ஜூன் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் தலைமையிலான அப்போதைய அரசு அதை பொதுவில் வெளியிடவில்லை. மலையாளத் திரையுலகில் புயல் மையம் கொண்டுள்ள நிலையில், அந்த அறிக்கை மீண்டும் கவனத்துக்கு வந்திருக்கிறது.

ஒளிப்பதிவு, கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறையின் முன்னாள் அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ், இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் அந்த அறிக்கை மிகவும் தெளிவில்லாதது என்றும், அதில் வேலை செய்ய எதுவும் இல்லை என்றும் கூறினார்.

“துணைக்குழு நிறைய வேலைகளைச் செய்தது மற்றும் பலரை நேர்காணல் செய்தது, ஆனால், நடவடிக்கை தேவைப்படும் குறிப்பிடும்படியான எதையும் அந்த அறிக்கை வழங்கவில்லை” என்று யாதவ் கூறினார்.

இருப்பினும், துணைக் குழுவின் உயர்மட்ட உறுப்பினர்களில் ஒருவரும், ஒரு முக்கிய பெண் உரிமை ஆர்வலருமான பூமிகா விமன்ஸ் கலெக்டிவ் திட்ட இயக்குநருமான கொண்டவீட்டி சத்யவதி, தெலுங்குத் திரையுலகில் பாலியல் சுரண்டல் குறித்து அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார். “தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை தலைவிரித்தாடுகிறது. திரையுலகில் அடையாளம் காணப்பட்ட 24 கைவினைத் துறையில் உள்ளவர்களிடம் - இளைய கலைஞர்கள் முதல் துணை ஊழியர்கள் வரை - நாங்கள் பேசினோம், எங்கள் கண்டுபிடிப்புகள் அறிக்கையில் உள்ளன. நாங்கள் விவரங்களை வெளியிட முடியாது. அது அரசாங்கத்தின் வேலை” என்று கூறிய அவர், “தற்போதைய அரசு அறிக்கையை வெளியிட வேண்டும்” என்று கூறினார்.

மலையாளத் திரையுலகம் குறித்த ஹேமா கமிட்டி அறிக்கைக்குப் பிறகு, நடிகை சமந்தா ரூத் பிரபு உட்பட தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த பல பெண்கள் சமூக ஊடகங்களில் தெலுங்கானா அரசு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று கோரியுள்ளனர்.

ஏப்ரல் 7, 2018-ல் ஹைதராபாத்தில் உள்ள ஃபிலிம் நகரில் உள்ள தெலுங்கு திரைப்பட வர்த்தக சபைக்கு வெளியே நடிகை ஸ்ரீ ரெட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. தெலுங்குத் திரையுலகில் பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தை அணுக பெண்கள் மற்றும் திருநங்கைகள் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைக் குழுவைத் தூண்டியது.

ஏப்ரல், 2019-ல், அப்போதைய தெலங்கானா அரசு, திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், காவல்துறை ஆணையர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அதிகாரிகள் மற்றும் தெலங்கானா மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகம், திரைப்படத் தொழில் சங்கங்கள் மற்றும் தொலைக்காட்சித் துறையின் பிரதிநிதிகள் உட்பட மற்ற உறுப்பினர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவை அமைத்தது. 

உயர்மட்டக் குழு ஒரு துணைக் குழுவை அமைத்தது, இது பெண் துணை நடிகர்கள், துணை நடிகர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் உட்பட பலருடன் குறைந்தது 20 கூட்டங்களை நடத்தியது. இந்த குழு குறிப்பிட்டப்டி, அவர்கள் பாலியல் சுரண்டலால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாகக் கருதப்பட்டனர்.

தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு ஆணையர் அரவிந்த் குமார் ஆகியோர் துணைக் குழுவின் பணிகளை மேற்பார்வையிட்டனர். நேர்காணல் செய்யப்பட்ட பெரும்பாலான மக்கள் சம்பளம், எழுத்துப்பூர்வ வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் இல்லாமை, சமமற்ற ஊதியம் மற்றும் மோசமான வேலை நிலைமைகள் ஆகியவற்றால் துன்புறுத்தப்பட்டதாகப் புகாரளித்தனர், பல பெண்கள் அவர்களுக்கென தனி ஓய்வு இடங்கள் அல்லது கழிப்பறைகள் இல்லை என்று தெரிவிக்கின்றனர்.

கோவிட்-19 பொதுமுடக்கம் மற்றும் கட்டுப்பாடுகளால் துணைக் குழுவின் பணி தடைபட்டது. ஆனால், 2022 வரை அதன் பணி தொடர்ந்தது.

சத்யவதி கூறுகையில்,  “தெலுங்கு திரையுலகம் ஒரு அமைப்பு சாரா துறை. பொறுப்புக்கூறல் இல்லை. குறிப்பாக பாலியல் தொல்லைகள் குறித்த புகார்களை எடுக்க யாரும் இல்லை. வேலை கொடுக்க பாலியல் உதவிகள் தேடப்படுகின்றன. பெண் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள்தான் அதிகம் சுரண்டப்படுகிறார்கள்,” என்று கூறினார்.

துணைக் குழு அறிக்கையின் சுருக்கம், அதன் கண்டுபிடிப்புகளைப் புகாரளித்து, பணியிடங்களை பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான கொள்கைகளை அரசாங்கம் உருவாக்குவதற்கு உதவ பரிந்துரைகளை வழங்குவதாகும். ஜூன் 2022-ல், இந்த குழுவானது, தெலுங்கு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொழில்களில் 'பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலினப் பாகுபாடு இருப்பதாக அரசாங்கத்திடம் சமர்ப்பித்தது.

இருப்பினும், கே.சி.ஆர் அரசாங்கம் இந்த குழுவின் கண்டுபிடிப்புகளை பகிரங்கப்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்து அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. துணைக் குழுவால் நேர்காணல் செய்யப்பட்ட பல பெண்கள், தங்களிடமிருந்து பாலியல் உதவி கோருபவர்கள் அல்லது அவர்கள் என்ன வகையான துன்புறுத்தலுக்கு ஆளானார்கள் என்று யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் நிறுத்திவிட்டனர்.

இந்நிலையில் இது குறித்து பல தெலுங்கு நடிகைகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். செப்டம்பர் 2020-ல் தனது நிசப்தம் திரைப்படத்திற்கான விளம்பர நிகழ்வில் பேசிய அனுஷ்கா ஷெட்டி, தெலுங்கு திரையுலகில் காஸ்டிங் கவுச் என்பது மிகவும் உண்மை என்றும், அந்த சுரண்டலில் இருந்து தன்னைக் காத்துக் கொண்டதாகவும் கூறினார்.

அதேபோல், நடிகர்கள் ஆமணி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வேலை இல்லாத இடத்தில் தனிப்பட்ட முறையில் சந்திக்க அழைக்கப்பட்டதைப் பற்றி பேசினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Telugu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment