#MeTooIndia புகார்கள் விசாரணை : பணியிடத்தில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் சுரண்டல்கள் குறித்து அவ்வபோது அங்கொன்றும், இங்கொன்றும் சர்ச்சையாக வெளிப்படும். பல நேரங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே நடவடிக்கைகள் எடுக்கப்படும் அவலங்களும் நடந்தேறியே வந்தது. ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக திரைப்படத் துறை, ஊடகவியல், மற்றும் கலைத்துறையில் நடைபெறும் பாலியல் வன்முறைகள் தொடர்பான புகார்களை பெண்கள் மீடு என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். பணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள் குறித்த குற்றச்சாட்டுகளை எப்படி கொடுப்பது என்பது தொடர்பாக படிக்க
#MeTooIndia புகார்கள் விசாரணை குழு அமைத்த மத்திய அமைச்சகம்
ஏற்கனவே பாலிவுட் திரைப்பட இயக்குநர்கள் மீது பல குற்றச்சாட்டுகளை நடிகைகள், உதவி இயக்குநர்கள், மற்றும் ஊடகவியலாளர்கல் முன் வைத்தனர். ஒரு படி மேலே போய் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் எம்.ஜே. அக்பர், ஊடகவியலாளராக இருந்த காலத்தில் பெண்களிடத்தில் தவறாக நடந்த கொண்ட அனுபவங்களை பகிரங்க குற்றச்சாட்டுகளாக பெண் ஊடகவியலாளர்கள் முன் வைத்தனர். அது தொடர்பான கட்டுரையைப் படிக்க
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம், இந்த புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இரண்டு தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். தற்போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர், மீடு புகார்கள் குறித்து விசாரணை செய்ய விசாரணை குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
மேலும், இந்த புகார்களை வெளிப்படுத்தும் ஒவ்வொரு பெண்களின் வலியினையும் என்னால் புரிந்து கொள்ள இயலுகிறது. சட்ட வல்லுநர்கள் மற்றும் துறை சார் வல்லுநர்கள் இந்த பிரச்சனைகள் குறித்து நல்ல தீர்வினை காண்பார்கள் என்று கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
Official statement of Union Minister Smt. @ManekaGandhiBJP on #MeTooIndia movement.#SexualHarassmentAtWork #DrawTheLine pic.twitter.com/5ELHZVHnth
— Ministry of WCD (@MinistryWCD) 12 October 2018